Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL நிறுவனமே ஆகஸ்ட் 15 சுதந்திர தின ஆபர்களை அறிவித்து இலவச டேட்டாவை வழங்கும் நிலைப்பாட்டில், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடிகளை கொட்டிய Reliance Jio நிறுவனம் சும்மா இருக்குமா?
அடுத்த சில தினங்களில் வரும் சுதந்திர தினத்தை வாடிக்கையாளர்களோடு சேர்ந்து கொண்டாடும் விதமாக, ஜியோ நிறுவனம் 100% வேல்யூ பேக் உடனான Jio Independence Day Offer 2022-ஐ அறிவித்துள்ளது.

சிங்கிள் ரீசார்ஜில்.. "ஆயிரக்கணக்கில்" சலுகைகள்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சுதந்திர தின சிறப்பு சலுகையாக தனது ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது ரூ.3,000 மதிப்புள்ள "கூடுதல் நன்மைகளை" அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2.5ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், 1 வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள நன்மைகளின் வழியாக ரூ.2,999 ரீசார்ஜ் ஆனது டபுள் மடங்கு நன்மைகளை வழங்குமொரு திட்டமாக உருமாறி உள்ளது!

4 வகையான இலவசங்கள் கிடைக்கும்!
ஜியோ அறிவித்துள்ள இந்த 'இன்டிபென்டன்ஸ் டே 2022' சலுகையானது, நிறுவனத்தின் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு ஆகஸ்ட் 9 அல்லது அதற்கு பிறகு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,999 திட்டத்தின் வழியாக அணுக கிடைக்கும் 100% வேல்யூ பேக் ஆனது, 4 கூப்பன்கள் வடிவில் உங்களுக்கான இலவச சலுகைகளை வழங்கும்.
மேலும் நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த 72 மணிநேரத்திற்குள், உங்கள் MyJio ஆப்பில் ரீசார்ஜ் கீழ்வரும் 4 கூப்பன்களும் வரவு வைக்கப்படும்.

என்னென்ன கூப்பன்கள்? என்னென்ன நன்மைகளை கொடுக்கும்?
ஜியோ இன்டிபென்டன்ஸ் சலுகையின் கீழ் - ரூ.2999 ரீசார்ஜ் வழியாக - ரூ.750 மதிப்புள்ள 75ஜிபி அளவிலான அதிவேக (கூடுதல்) டேட்டா, Ajio வழியிலான ரூ.750 தள்ளுபடி, netmeds.com வழியாக ரூ.750 தள்ளுபடி மற்றும் ixigo மீதான ரூ.750 தள்ளுபடி அணுக கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சிறப்பு சலுகை ஆனது ரூ.2999 மதிப்புள்ள ரீசார்ஜ் வழியாக மொத்தம் ரூ.3,000 மதிப்புள்ள இலவசங்களை வழங்கும்.
ஜியோ நிறுவனம் இந்த புதிய சலுகையை, அதன் ட்வீட்டர் பக்கம் வழியாக அறிவித்தது. மேலும் குறிப்பிட்ட சலுகையின் Terms and Conditions-ஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விரிவாக பட்டியலிட்டுள்ளது.

ஆஃப்லைன்-ஆ? ஆன்லைன் ரீசார்ஜ்-ஆ? கூப்பன்களை 'ரீடிம்' செய்வது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, ரூ.2999 ரீசார்ஜ் வழியிலான இலவச கூப்பன்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் ரீசார்ஜ் என்கிற எந்த கட்டுப்பாடும் இருக்காது
அதாவது குறிப்பிட்ட திட்டத்தை ஆஃப்லைன் வழியாகவும் ரீசார்ஜ் செய்யலாம் அல்லது ஆன்லைனில் கூட ரீசார்ஜ் செய்து, இலவச கூப்பன்களை பெறலாம்.
பின்னர் MyJio ஆப்ஸில் உள்ள வவுச்சர் செக்ஷனில் இருந்து, உங்களுக்கு இலவசமாக கிடைத்த டேட்டா வவுச்சரை மற்றும் கூப்பன்களை நீங்கள் 'ரீடிம்' செய்யலாம்.
இந்த இலவச டேட்டா வவுச்சர் மற்றும் கூப்பன்களின் வேலிடிட்டி ஆனது நீங்கள் பயன்படுத்தும் ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

சைலன்ட் ஆக அறிமுகமான ஜியோ கேம்ஸ் ஆப்!
அறியாதோர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 'ஜியோ கேம்ஸ்வாட்ச்' (Jio GamesWatch) என்கிற புதிய கேமிங் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பிளாட்ஃபார்ம், பல ஜியோ டிவைஸ்களில் சிங்கிள் பட்டனைக் கிளிக் செய்வதன் வழியாக கேம் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications