Home
News

அடுத்த 5 நாள் கெடு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 912 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. சுதந்திர தின ஆஃபர்!

ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெலிகாம் வாடிக்கையாளர்களும் உச்சுக்கொட்டும் வகையில், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2999 திட்டத்தில் (Jio Rs 2999 Plan) பிரம்மாண்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதிரடியாக ரீசார்ஜ் செய்துவருகின்றனர்.

நாட்டில் ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (Bsnl) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இருந்தாலும், ஜியோ (Jio) போல ஆஃபர்களை யாராலும் வழங்க முடிவதில்லை. இதனாலேயே, நாளுக்கு நாள் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். வேறு எந்த நிறுவனத்துடன் ஒப்பிட்டு பார்த்தாலும், ஜியோவின் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீப்பெய்ட் திட்டங்களின் விலை நியாமாகவே இருக்கும்.

365 நாட்கள் வேலிடிட்டி.. 912 ஜிபி டேட்டா.. சுதந்திர தின ஆஃபர்!

இந்த திட்டங்களிலும் ஓடிடி சப்ஸ்கிரிப்சன், கூடுதல் டேட்டாவை வழங்கி வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு செல்லவே யோசிக்கும் அளவுக்கு, ஜியோ அவர்களை மாற்றிவிட்டது. அந்த வரிசையில், ஏற்கனவே மிகவும் பிரபலமான ரூ 2999 திட்டத்தில், வியக்கும்படி இப்போது, சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்துவிட்டால், ஒரு வருடத்துக்கு டேட்டா, வாய்ஸ் கால் மட்டுமல்லாமல் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் மருந்துகள், ஹோட்டல் புக்கிங் போன்ற அனைத்திலும் நம்ப முடியாத சலுகையை பெற முடியும்.

ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த திட்டம், ஜியோ வாடிக்கையாளர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற திட்டமாகும். ஏனென்றால், மாதத்துக்கு வெறும் ரூ.250 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் கிடைத்தால் யாருக்கு பிடிக்காமல் இருக்கப் போகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது ஆண்டு முழுவதும் வேறு எந்த திட்டங்களையும் ரீசார்ஜ் செய்யாமல் இருந்து கொள்ளலாம். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். அதேபோல நாள்தோறும் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த டேட்டாவை 365 நாட்களுக்கு கணக்கிட்டு பார்த்தால், 912.5 ஜிபி டேட்டா உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இதுவே மதிப்புமிக்கதாக இருக்கும் வேளையில், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜியோ வாடிக்கையாளர்களே வியந்து போகும்படி மேலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் பலன்கள் போக, கூடுதலாக இப்போது சலுகைகளை அனுபவிக்க முடியும். அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு யாத்ரா (Yatra) டிராவல் ஏஜென்சி மூலம் ரூ.1,500 விமான டிக்கெட் தள்ளுபடி கிடைக்கும். அதோடு, இந்தியாவில் எங்கு சென்று ஹோட்டல் புக் செய்தாலும் ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும், அஜியோ (Ajio) தளத்தில் ஆர்டர் செய்யும் ப்ராடக்ட்களுக்கு ரூ.200 தள்ளுபடி கொடுக்கப்படும். இது ரூ.900 மதிப்புள்ள ப்ராடக்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், ஆன்லைன் மருந்து விற்பனை தளமான நெட்மெட்ஸ் (Netmeds) மூலம் எதாவது மருந்துகளை ஆர்டர் செய்தால், அதில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

அதோடு நெட்மெட்ஸ் என்எம்எஸ் சூப்பர் கேஸ் (NMS Supercash) சலுகையும் கிடைக்கும். மேலும், ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளத்தில் ஆடியோ ப்ராடக்ட்கள் (Audio Products) வாங்கினால், 10 சதவீத தள்ளுபடியும், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கினால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றையும் 365 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மாதத்துக்கு செய்யும் செலவை குறைக்க வேண்டுமென்றால், மொத்தமாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம், இது நல்ல லாபத்தை தரக்கூடியதாக நிச்சயம் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Independence Day 2023 Offer Rs 2999 Plan With 365 Days Validity 912 GB Data Unlimited Voice
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X