சத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! முழுவிவரங்கள்.!

|

ஜியோ நிறுவனம் சத்தமில்லாம் 5 புத்தம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இவை அனைத்து சற்று வித்தியாசமன திட்டங்கள் என்றே கூறலாம். மேலும் இதுபற்றி விரிவான தகவல்களை இப்போது பார்ப்போம்.

ஒரு நாள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டுள்ளது.

ஜியோ நிறுவனம் தற்போது அதன் புதிய இன்-பிளைட் திட்டங்களை ரூ.499 முதல் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாகஇந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரான விமான இணைப்பு திட்டங்களான ரூ.499, ரூ.699 மற்றும் ரூ.999 ஆகிய அனைத்துமே ஒரு நாள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டுள்ளது.

இன்-பிளைட் திட்டங்கள் ஆனது

மேலும் இந்த இன்-பிளைட் திட்டங்கள் ஆனது விமான பயணங்களின் போது உள்வரும் அழைப்புகளை அனுமதிக்காது பதிலாக இது உள்வதும் எஸ்எம்எஸ் செய்திகளை இலவசமாக பெற அனுமதிக்கிறது. இதற்குவேண்டி ஜியோ நிறுவனம் 22 விமான நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது விமான பயணத்தின் போது இணைப்புகளை பெறுவதை சுலபமாக்குகிறது.

இந்தியாவின் முதல் RRTS ரயில்.. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம்! முதலில் இங்கு தான் வரப்போகிறது!இந்தியாவின் முதல் RRTS ரயில்.. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம்! முதலில் இங்கு தான் வரப்போகிறது!

 ப்ரீபெய்ட் மற்றும்

குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என நிறுவனத்தின் இரண்டு வகை வாடிக்கையாளர்களுக்கும்இந்த இன்-பிளைட் இணைப்பு திட்டங்கள் பொருந்துளம். அதன்படி ஜியோ அறிமுகம் செய்த ரூ.449-பேக் அனது 250எம்பி டேட்டா, 100நிமிட வெளிச்செல்லும் குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

ரூ.699-பேக் ஆனது 500எம்பி டேட்டா,

ஜியோவின் ரூ.699-பேக் ஆனது 500எம்பி டேட்டா, 100நிமிட குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ஜியோவின் ரூ.999-பேக் ஆனது 1ஜிபி டேட்டா, 100நிமிட குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

யா, அலிட்டாலியா

ஏர் லிங்கஸ், ஏர் செர்பியா, அலிட்டாலியா, ஆசியானா ஏர்லைன்ஸ், பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக், எகிப்து ஏர், எமிரேட்ஸ், எட்டிஹாட் ஏர்வேஸ், யூரோ விங்ஸ், ஈ.வி.ஏ ஏர், குவைத் ஏர்வேஸ், லுஃப்தான்சா, மலேசியா ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர், எஸ்.ஏ.எஸ் ஸ்காண்டிநேவிய ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்விஸ், டிஏபி ஏர் போர்ச்சுகல், துருக்கிய ஏர்லைன்ஸ்,
உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ் விர்ஜின் அட்லாண்டிக் என 22விமான நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது ஜியோ நிறுவனம். எனவே இந்த விமானங்களில் இந்த இன்-பிளைட் திட்டங்களை பயன்படுத்த முடியும்

கனெக்டிவிட்டி திட்டங்களுடன்

இந்த இன்-பிளைட் கனெக்டிவிட்டி திட்டங்களுடன் சேர்ந்து ஜியோ நிறுவனம் அதன் வைஃபை அழைப்பிற்கான வேல்யூ பேக்களையும் கொண்டு வந்துள்ளது. இந்த வேல்யூ பேக்குகளின் விலை ரூ.1102 மற்றும் ரூ.1202 ஆகும். அதன்படி இந்த திட்டங்களில் வைஃபை வழியாக உள்வரும் அழைப்புகள் ரூ.1-க்கு கிடைக்கின்றன. எனவே நிமிடத்திற்கு ரூ.1 என்கிற கட்டணத்தில் வைஃபை வழியாகநீங்கள் இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு குரல் அழைப்புகளை செய்யலாம்.

 ரூ.1102 வேல்யூ பேக்

ஜியோ அறிமுகம்செய்த ரூ.1102 வேல்யூ பேக் ஆனது வரம்பற்ற உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் குரல் அழைப்புகளை, வைஃபை அழைப்பு நன்மையோடு வழங்குகிறது. பின்பு இதில் ஜியோ எண்கள் உடனான வீடியோ கால், டேட்டா, எஸ்எம்எஸ், இந்திய எண்களுக்கான வாய்ஸ் கால் போன் நன்மைகளும் அடங்கும். இந்த பேக் ஆனது மொத்தம் 100-க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு
பொருந்தும்.

அறிமுகம் செய்த ரூ.1202

அதேபோல் ஜியோ அறிமுகம் செய்த ரூ.1202 வேல்யூ பேக் ஆனது ரூ.1102 திட்டம் வழங்கும் அதே நன்மையை வழங்குகிறது. ஆனால் இது 170நாடுகளுக்கு பொருந்தும். மேலும் இதில் ஜியோ எண்கள் உடனான வீடியோ கால், டேட்டா, எஸ்எம்எஸ், இந்திய எண்களுக்கான
வாய்ஸ் கால் போன்ற நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio In-Flight Connectivity Packs Launched: starting at Rs 499: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X