Home
News

கேபிள் TV-க்கு விழுந்த அடி.. 1000+ டிவி சேனல்கள்.. 10+ ஓடிடி சந்தா.. 30 Mbps வேக டேட்டா.. ரூ.599+ GST போதும்!

கேபிள் டிவிக்கு சேவைக்கு அடி விழுவது போல ஜியோ நிறுவனத்தின் ஏர்ஃபைபர் திட்டங்களில் 1000+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 10+ பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இதில் ஃபைபர் டேட்டா, வை-பை வாய்ஸ் காலிங் போன்ற சலுகைகளும் கிடைப்பதால், வரவேற்பு பெறுகிறது.

ரூ.599 விலையில் இருந்து ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த விலையுடன் ஜிஎஸ்எடி கட்டணம் இருக்கும். முதல்முறை ஏர்ஃபைபர் திட்டத்தை பெறும்போது, இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கலாம். இருப்பினும், 6 மாதங்களுக்கு திட்டத்தை பெறும்போது, இன்ஸ்டாலேஷன் கட்டணம் கழிக்கப்படலாம்.

கேபிள் TV-க்கு விழுந்த அடி.. 1000+ டிவி சேனல்கள்.. 10+ ஓடிடி சந்தா!

ஜியோ மொபைல் நம்பரை வைத்தே இந்த ஏர்ஃபைபர் திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. வை-பை ரூட்டர், 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உள்ளிட்ட டிவைஸ்கள் இந்த ஏர்ஃபைபர் திட்டங்களில் கிடைக்கும். இந்த 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாகவே லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்களை பார்த்து கொள்ள முடியும்.

ஜியோ ஹோம் ரூ.599 திட்ட விவரங்கள் (Jio Home Rs 599 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கிடைக்கும். 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, மாதத்துக்கு 1000 ஜிபி டேட்டாவை 30 எம்பிபிஎஸ் வேகத்தில் (30 Mbps Speed) பயன்படுத்தி கொள்ள முடியும். பிறகு வேகம் குறையும்.

64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். வை-பை ரூட்டர் கிடைப்பதால், அன்லிமிடெட் வை-பை கால்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கிடைப்பதால், இதில் 10+ ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5) ஓடிடி ஆப்கள் உள்ளன.

மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் கிடைக்கிறது.

1000+ லைவ் டிவி சேனல்களையும் இதே 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் (4K Android Box) வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். இது ஆரம்ப விலையில் கிடைக்கும் ஏர்ஃபைபர் திட்டமாக இருக்கிறது. இந்த டேட்டா வேகம் பலருக்கு போதுமானதாக இருக்காது. ஆகவே, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் ஜியோ ஹோம் ரூ.899 திட்டத்தை அணுகலாம்.

ஜியோ ஹோம் ரூ.899 திட்ட விவரங்கள் (Jio Home Rs 899 Plan Details): இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் (100 Mbps Speed) டேட்டா கிடைக்கும். இதிலும் 1000 ஜிபி டேட்டாவை (1000 GB Data) கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறையும். இதிலும் 1000+ டிவி சேனல்கள் கிடைக்கும்.

ஓடிடி சந்தாவில் ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரிபிளஸ், டைம்ஸ்பிளே, தாரங்பிளஸ், ஈராஸ்நவ், லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரூமீ மற்றும் ஈடிவி வின் ஆகிய ஆப்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கும் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். முதல்முறை பெறும்போது, இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும்.

ஜியோ நிறுவனத்தின ஏர்ஃபைபர் மற்றும் ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஜியோ ஹோம் (Jio Home) திட்டங்கள் கிடைக்கும். ஜியோ ஸ்டோர்கள் (JioStores), மை ஜியோ ஆப் (MyJio App) மற்றும் அதிகாரப்பூர்வ இணைய தளம் வழியாக இந்த திட்டங்களை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Jio Home Rs 599 Plan With GST 1000 TV Channels 30 Mbps Speed Data Voice Calls Check AirFiber Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X