கேபிள் TV-க்கு சரவெடி.. 2 மாசத்துக்கு இலவசம்.. 1000 டிவி சேனல்கள்.. 11 ஓடிடி சந்தா.. 30 எம்பிபிஎஸ் டேட்டா!
தீபாவளிக்கு பண்டிகைக்கு ஒட்டுமொத்த ஜியோ (Jio) கஸ்டமர்களும் அடித்து பிடித்து பெறும்படியான ஜியோஹோம் 60 நாட்கள் இலவச சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 60 நாட்கள் முழுவதும் 1000 லைவ் டிவி சேனல்கள், 11 ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், வை-பை டேட்டா மற்றும் வை-பை காலிங் சலுகைககளும் கிடைக்கின்றன. இந்த 60 நாட்கள் இலவச சலுகையை எப்படி பெறுவது? முழு சலுகைகள் என்ன? இந்த சலுகை முடிந்த பிறகு எவ்வளவு கட்டணம் இருக்கும்? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஜியோஹோம் சலுகை ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது. ஆனால், ஜியோ ஃபைபர் (Jio Fiber) மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் (Jio Airfiber) திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, உங்களது பகுதியில் ஜியோ ஃபைபர் திட்டங்கள் கிடைக்கிறதா என்பதை முதலில் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த சலுகையை ஜியோ வெப்சைட், மைஜியோ ஆப் மற்றும் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர் ஆகியவற்றின் மூலம் பெற்று கொள்ளலாம். ஜியோ வெப்சைட் மற்றும் மைஜியோ ஆப் ஆகியவற்றில் ஒரே மாதிரியான செயல்முறை இருக்கிறது. ஆகவே, அதை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஜியோ வெப்சைட்டுக்கு சென்ற உடனேயே ஹோம்பேஜ்ஜில் 60 நாட்கள் இலவச ஆபர் பேனர் இருக்கும்.
அதை கிளிக் செய்த உடனேயே பின் கோட், இன்டாலேஷன் அட்ரஸ் விவரங்கள் கேட்கப்படும். இதை வைத்தே உங்களது பகுதியில் ஜியோ ஃபைபர் சேவைகள் கிடைக்கிறதா என்பது தெரியப்படுத்தப்படும். இந்த சேவை கிடைக்கும்பட்டத்தில் உங்களது மொபைல் நம்பர் (Mobile) மற்றும் அந்த மொபைல் நம்பர் உரிமையாளரின் பெயர் (Name) கேட்கப்படும்.
இதை கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கான புக்கிங் செயல்முறை முடிந்தது. இந்த புக்கிங் செயல்முறையை டிராக் செய்து கொள்ளலாம். இந்த சேவை உங்களுக்கு கொடுக்கப்படும்போது, வை-பை ரூட்டர், 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் போன்ற டிவைஸ்கள் கொடுக்கப்படும். இதன் மூலம் லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் வை-பை டேட்டா கிடைக்கும்.
ஆகவே, 1000 லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதேபோல 11 ஓடிடி ஆப்களின் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சேவை கொடுக்கப்படும். இந்த சேவையில் வை-பை மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் 60 நாட்களுக்கு கிடைக்கும். அதன்பிறகு ரூ.599 செலுத்தி தொடரலாம்.
ஜியோ ரூ 599 திட்ட விவரங்கள் (Jio Rs 599 Plan Details): இந்த ஜியோஹோம் திட்டமானது, ஆரம்ப விலையில் கிடைக்கிறது. முன்னதாக பார்த்த இலவச சலுகைகள் இந்த திட்டத்தின் சலுகைகளாகவே இருக்கின்றன. ஆகவே, இதிலும் முன்பு பார்த்த சலுகைகளே கிடைக்கும். 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.
இந்த ஓடிடி ஆப்களின் சந்தாவை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT), சோனிலிவ் (Sony Liv), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win), ஈராஸ்நவ் (Eros Now) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.
இந்த இலவச ஆஃபர் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும்போதும் கிடைக்கிறது. இருப்பினும், இதிலும் உங்களது முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்த சலுகை கிடைத்தது. இப்போது, தீபாவளி பண்டிகையிலும் தொடர்ந்து கிடைக்க இருக்கிறது. இதனால், ஜியோ கஸ்டமர்களுக்கு தீபாவளி ஆஃபார மாறிவிட்டது.


Click it and Unblock the Notifications








