சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஜியோ: இரண்டு அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு- 28 நாட்கள் பிளான்!

|

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட தொலைத் தொடர்பு நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. காரணம் ஜியோ பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் வழங்குவதே ஆகும். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது இரண்டு ஜியோபோன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கிறது.

ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு

ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு

ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது இது முதன்முறையல்ல. சமீபத்தில் ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தி அறிவித்தது. ரூ.749-க்கு கிடைத்த ரீசார்ஜ் திட்டம் ரூ.150 உயர்த்தப்பட்டு ரூ.899 என தற்போது கிடைக்கிறது. இதை தொடர்ந்து ஜியோ தனது ஜியோபோனின் அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

ரூ.155 மற்றும் ரூ.185 ஆகிய இரண்டு திட்டங்கள்

ரூ.155 மற்றும் ரூ.185 ஆகிய இரண்டு திட்டங்கள்

28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை கொண்டுள்ள ஜியோபோன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தற்போது ஜியோ உயர்த்தி இருக்கிறது. அது ரூ.155 மற்றும் ரூ.185 ஆகிய இரண்டு திட்டங்கள் ஆகும். ஜியோ அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்க காரணமே மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்குவது தான். அப்படி இருக்கையில், ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்த்துவது என்பது அதன் பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஜியோவின் இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

விலை உயர்த்தப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

விலை உயர்த்தப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

ஜியோ ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்திற்கான விலையை ரூ.31 அதிகரித்துள்ளது. எனவே தற்போது இந்த திட்டம் ரூ.186 என கிடைக்கிறது. அதேபோல் ரூ.185 ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.37 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த திட்டம் ரூ.222 என கிடைக்கிறது. ஜியோபோனின் உயர்த்தப்பட்ட இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதிபலிக்கின்றன.

ரூ.186 திட்டத்தின் நன்மைகள்

ரூ.186 திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.186 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இது தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள், திட்டம் செல்லுபடியாகும் மொத்த நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. கூடுதலாக இந்த திட்டத்தில் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.222 திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.222 திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் விலை உயர்த்தப்பட்ட ரூ.222 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் உட்பட தினசரி 100 எஸ்எம்எஸ்-கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64kbps ஆக குறைக்கப்படும். கூடுதலாக இந்த திட்டத்தில் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் வழங்கப்படுகிறது.

ரூ.749 திட்டத்தின் விலை அதிகரிப்பு

ரூ.749 திட்டத்தின் விலை அதிகரிப்பு

ஜியோ முன்னதாக ரூ.749 திட்டத்தின் விலையை உயர்த்தி அறிவித்தது. இந்த திட்டத்தின் விலை ஆனது ரூ.150 உயர்த்தப்பட்டது. இதன்படி தற்போது இந்த திட்டம் ரூ.899 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் ஜியோ பயனர்களுக்கு மொத்தம் 24 ஜிபி டேட்டா சலுகையை வழங்குகிறது. இந்த டேட்டா வரம்பு முடிந்த உடன் இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 336 நாட்கள், மேலும் பயனர்கள் 12 சுழற்சிகளில் (2ஜிபி x 12 சுழற்சிகள் ஒவ்வொன்றும் 28 நாட்கள்) டேட்டாவைப் பெறுகிறார்கள்.

பிற ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலை உயர்வா?

பிற ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலை உயர்வா?

ஒவ்வொரு 28 நாட்களின் அதே 12 சுழற்சிகளில், ஜியோபோன் பயனர்களும் 50 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். ஆனால் குரல் அழைப்புக்கு எந்த தடையும் இல்லை. இது தவிர, ஜியோ இந்த திட்டத்துடன் அதன் பயனர்களுக்கு JioCinema, JioSecurity, JioCloud மற்றும் JioTV ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. ரூ.749 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோபோன் பயனர்கள் இப்போது அதற்கு ரூ.899 செலுத்த வேண்டும். திட்டத்துடன் வேறு எந்த நன்மைகளும் வழங்கப்படவில்லை. ஜியோவின் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Hiked its two Jiophone prepaid recharge plan price: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X