Jio ஹீரோ திட்டம்: கம்மி விலையில் 2GB டேட்டா நன்மை.. Jio வாடிக்கையாளர்களின் மனம் மாறுமா? எந்த விலை திட்டம்?
ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை திடீரென அதிகரித்தது. இதனால், விரக்தி அடைந்த பல வாடிக்கையாளர்கள், மலிவான விலை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை தேடி பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கிவிட்டனர். இதனால், ஜியோ நிறுவனம் தற்போது புதிய யுக்தியை கையாளத் துவங்கியுள்ளது. ஜியோ நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களின் மனதை குளிர்விக்கும் நோக்கத்தில், பல அதிக நன்மைகள் கொண்ட திட்டங்களை வழங்க துவங்கியுள்ளது. இதில் இப்போது ஜியோவின் 2GB டேட்டா நன்மை திட்டம் சேர்ந்துள்ளது.
ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் குறிப்பிட்டு கூறும் வகையில், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் ஒரு பிரிவு தான் ஜியோவின் ஹீரோ திட்டங்கள். இந்த ஜியோ ஹீரோ பேக் திட்டங்கள், வழக்கமான திட்டங்கள் போல் அல்லாமல் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில்கொண்டு ஆறுமுகம் செய்யப்பட்ட திட்டங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ 349 திட்டம் (Jio Rs 349 Plan):
ஜியோ நிறுவனம் தனது ஹீரோ திட்டங்களின் கீழ் ரூ.349 விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறுகிய காலத்திற்குள் அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வளைடைய உடன் வருகிறது. இந்த திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கும் செல்லுபடியாகும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் சந்தாதாரர்கள் 28 நாள் வேலிடிட்டி உடன் 56GB டேட்டாவை மொத்தமாக பெறுகிறார்கள். இது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, இந்தத் திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டா அம்சம் உள்ளது. இது பயனர்கள் தங்கள் பகுதியில் 5G டேட்டா இருந்தால் அதைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஜியோவின் நிலையான சலுகைகளுக்கு அப்பால், இந்த ரீசார்ஜ் திட்டம் கூடுதல் சலுகைகளுடன் வருகிறது.
ஜியோ டிவி (JioTv), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சேவைகளுக்கான இலவச அணுகலுடன், OTT ஸ்ட்ரீமிங்கிற்கான ஜியோ சினிமாவிற்கு பயனர்கள் பாராட்டு சந்தாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. உங்களுக்கும் குறைந்த விலையில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் 5ஜி அணுகல் வேண்டுமென்றால் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
பிஎஸ்என்எல் 5ஜி இந்தியாவில் சோதனை (BSNL 5G Testing In India):
இதற்கிடையில், BSNL இந்தியாவில் அதன் 5G சேவைகளுக்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா சமீபத்தில் 5G-இயக்கப்பட்ட நெட்வொர்க்கில் செய்யப்பட்ட வீடியோ அழைப்பைக் காண்பிக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். பிஎஸ்என்எல் 5ஜி சேவை இன்னும் 9மாதங்களுக்குள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








