மக்கள் அதிகம் விரும்பிய Jio ரூ.750 திட்டம் விலை குறைப்பு.! இனி புது ரேட் என்ன தெரியுமா?

|

ரிலையன்ஸ் ஜியோவிடம் (Jio) இருந்து கிடைக்கும் ஒரு பெஸ்டான ரீசார்ஜ் திட்டம் என்றால் அது ரூ.750 திட்டமாகும். பட்ஜெட் பிரியர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்த திட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ பயனர்களால் அதிகம் ரீசார்ஜ் செய்யப்பட்ட இந்த பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை தற்போது ஜியோ நிறுவனம் திடீரென குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்டதால், இந்த ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகளில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட விலையை ஜியோ குறைத்ததா?

புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட விலையை ஜியோ குறைத்ததா?

ஆகஸ்ட் மாதம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்பு நன்மை, OTT சந்தாக்கள் மற்றும் தினமும் 2GB டேட்டா நன்மை ஒட்டுமொத்த நன்மைகளையும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் வெறும் ரூ.750 விலையில் அறிமுகம் செய்திருந்தது.

பிரபலமான ரீசார்ஜ் திட்டத்தின் விலை குறைக்கப்பட்டது

பிரபலமான ரீசார்ஜ் திட்டத்தின் விலை குறைக்கப்பட்டது

இந்த ரீசார்ஜ் திட்டம் அப்போதிலிருந்து மிகவும் பிரபலமான ரீசார்ஜ் பேக்குகளில் ஒன்றாகத் திகழ்கிறது. என்ன தான் குறுகிய காலகட்டத்திற்குள் இந்த ரீசார்ஜ் திட்டம் பிரபலம் அடைந்தாலும் கூட, ஜியோ இந்த திட்டத்தின் விலையில் இப்போது புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜியோ இப்போது இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையைத் திருத்தி அதே நன்மைகளை வெறும் ரூ.749 என்ற விலையில் வழங்குகிறது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

ரூ.750 திட்டத்தின் நன்மைகள் மாற்றப்பட்டுள்ளதா?

ரூ.750 திட்டத்தின் நன்மைகள் மாற்றப்பட்டுள்ளதா?

டெலிகாம் ஆபரேட்டர் ரூ.750 திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் ஒரே மாதிரியாக வைத்திருந்தாலும், இன்னும் ஒரு பெரிய வித்தியாசம் இந்த விலை குறைக்கப்படத் திட்டத்தில் உள்ளது. ரூ.750 திட்டத்தில், ஜியோ 100Mb டேட்டாவை கூடுதலாக ரூ.1க்கு வழங்குகிறது. ஆனால், இனி, இப்போது கிடைக்கும் ரூ.749 ரீசார்ஜ் திட்டப் பயனர்களுக்கு, இந்த கூடுதல் 100 Mb டேட்டா கிடைக்காது. ஜியோவின் புதுப்பிக்கப்பட்ட ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் புதிய ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இது மொத்தம் 180 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது, 90 நாட்களுக்கு தினமும் 2ஜிபி என்ற விதத்தில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை உடன் வருகிறது. ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி போன்ற கூடுதல் இலவச நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.

FASTag பேலன்ஸை எப்படி SMS மூலம் அறிந்துகொள்வது? SBI பயனர்களுக்கு கிடைத்த புது வசதி.!FASTag பேலன்ஸை எப்படி SMS மூலம் அறிந்துகொள்வது? SBI பயனர்களுக்கு கிடைத்த புது வசதி.!

இதே விலை வரம்பில் ஜியோ இன்னும் எத்தனை திட்டங்களை வழங்குகிறது?

இதே விலை வரம்பில் ஜியோ இன்னும் எத்தனை திட்டங்களை வழங்குகிறது?

ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலில் உள்ள மற்ற திட்டங்களை இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால், ஜியோ டெலிகாம் நிறுவனம் ரூ. 800 விலைக்கு கீழ் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் அதன் பயனர்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகின்றன. இந்த 3 திட்டங்களின் விலை ரூ.533, ரூ.719 மற்றும் ரூ.749 ஆகும்.

எந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

எந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

ஜியோவின் ரூ.533 திட்டமானது, அதன் பயனர்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் கிடைக்கும் மற்ற நன்மைகள் அனைத்தும் நாம் முன்பு பார்த்த ரூ.549 திட்டத்திற்கு நெருக்கமானது. அதேபோல், ஜியோவின் ரூ.719 திட்டமானது, தினமும் 2ஜிபி டேட்டா உடன் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இறுதியாக, ரூ.749 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?

மக்கள் இந்த திட்டத்தை ஏன் அதிகம் ரீசார்ஜ் செய்கிறார்கள்?

மக்கள் இந்த திட்டத்தை ஏன் அதிகம் ரீசார்ஜ் செய்கிறார்கள்?

90 நாட்கள், அதாவது மொத்தமாக 3 மாதங்களுக்கு முழுமையாக தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் இந்த திட்டத்தை மக்கள் ஏன் அதிகம் ரீசார்ஜ் செய்தார்கள் என்பதற்கான இப்போது நமக்கு தெளிவாகிவிட்டது. ஜியோவின் ரூ.719 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் பயனர்களுக்கு வெறும் 84 நாட்களுக்கு மட்டுமே தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக 30 ரூபாய் அதிகம் செலுத்தினால் 90 நாள் வேலிடிட்டி உடன் தினமும் 2ஜிபி டேட்டா கிடைப்பதனாலேயே மக்கள் இந்த திட்டத்தை அதிகம் விரும்பியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Jio Has Slightly Slashed The Price Of Its Prepaid Rs 750 Plan Now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X