Home
News

336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய ஜியோ.. எந்த திட்டம்?

ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிரபலமான ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளது ஜியோ நிறுவனம்.

அதாவது gadgetsnow வெளியிட்ட தகவலின்படி, ஜியோ நிறுவனம் ரூ.1599 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஜியோ ரூ.1559 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 3600 இலவச எஸ்எம்எஸ், 24ஜிபி மொத்த டேட்டா, ஜியோ ஆப்ஸ்களின் இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியது இந்த ஜியோ ரூ.1599 ப்ரீபெய்ட் திட்டம்.

சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய ஜியோ.. எந்த திட்டம்?

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் முக்கியமான சலுகையை நீக்கியுள்ளது. அதாவது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது. ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.

ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 40ஜிபி போனஸ் டேட்டா நன்மையை வழங்கியது. தற்போது அந்த 40ஜிபி போனஸ் டேட்டா தான் நீக்கப்பட்டுள்ளது. ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த 40ஜிபி சில காலங்கள் மட்டுமே கிடைக்கும் என ஜியோ கூறியிருந்தது. அதன்படி சில காலங்கள் மட்டுமே கிடைத்த 40ஜிபி டேட்டா தற்போது நீக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து போனஸ் டேட்டாவை நீங்கள் விரும்பினால், ரூ.299, ரூ.749, ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். தற்போது இந்த மூன்று திட்டங்கள் போனஸ் டேட்டா நன்மையை வழங்குகின்றன. மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இப்போது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த அந்த இரண்டு திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய ஜியோ.. எந்த திட்டம்?

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

அதேபோல் ஜியோ நிறுவனம் ஜியோ ஏர்ஃபைபர் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஜியோ ஏர்ஃபைபர் ஆனது ரூ.6000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் 1.5 ஜிபிபிஎஸ் (1.5 Gbps) என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட்(Internet Speed) கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio has silently removed this prepaid plan which offered 336 days validity : check details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X