Home
News

சத்தமின்றி மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கிய Jio.. எந்தெந்த திட்டங்கள் தெரியுமா?

ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் ரூ.3.662, ரூ.3226 மற்றும் ரூ.3225 ப்ரீபெய்ட் திட்டங்களை தான் நீக்கி உள்ளது. அதாவது இந்த திட்டங்கள் ஓடிடி நன்மைகள் மற்றும் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜியோ ரூ.3,662 ப்ரீபெய்ட் திட்டம் ( Jio Rs 3662 plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா, 365 நாள் வேலிடிட்டி, SonyLIV மற்றும் Zee5 சந்தாவை வழங்கின.

சத்தமின்றி மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கிய ஜியோ..

அதேபோல் ஜியோவின் ரூ.3,226 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3226 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, 365 நாள் வேலிடிட்டி, SonyLIV சந்தாவை வழங்கியது. மேலும ஜியோவின் ரூ.3225 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3225 plan) தினமும் 2ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி, Zee5 சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கி வந்தது. தற்போது இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் நிறுத்தவிட்டது ஜியோ நிறுவனம்.

குறிப்பாக ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியதால் பல்வேறு மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சரி இப்போது ஜியோ நிறுவனம் ரூ.500-க்குள் வழங்கும் சில முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சத்தமின்றி மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கிய ஜியோ..

ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 349 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 399 plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் அதாவது அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சத்தமின்றி மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கிய ஜியோ..

ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 449 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio has quietly removed three popular prepaid plans:Do you know which plans?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X