Home
News

BSNL-க்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் இடத்தை பிடித்த ஜியோ: எதில் தெரியுமா?

ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ஜியோ நிறுவனம் அதிவேக 5ஜி சேவையை வழங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம்
செய்யத் திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி

பிஎஸ்என்எல் 4ஜி

தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கும் பணி நடந்து வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கால்பதித்தது. அறிமுகமான சில ஆண்டுகளில் மற்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

லேண்ட்லைன் சேவை

லேண்ட்லைன் சேவை

குறிப்பாக ஜியோ நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தான் லேண்ட்லைன் வசதியை அறிமுகம் செய்தது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக லேண்ட்லைன் சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையில் பின்தங்கி இருந்தாலும் கூட லேண்ட்லைன் சேவையில் முதல் இடம் வகித்து வந்தது.

முதல் இடத்தை பிடித்துள்ளது ஜியோ

முதல் இடத்தை பிடித்துள்ளது ஜியோ

இந்தநிலையில் 22 ஆண்டுகளாக லேண்ட்லைன் சேவையை வழங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை 3 ஆண்டுகளுக்கு முன் லேண்ட்லைன் சேவையை தொடங்கிய ஜியோ பின்னுக்கு தள்ளி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லேண்ட்லைன் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை
பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது ஜியோ.

 சுமார் 2.59 கோடி பேர்

கடந்த ஆக்ஸ்ட் மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 2.59 கோடி பேர் லேண்ட்லைன் சேவையை பெற்றுள்ளனர். மேலும் ஜியோ நிறுவனம் 73.4 லட்சம் சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் நிறுவனம் 71.3 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம்

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் 62 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் 15,000 லேண்ட்லைன் சந்தாதாரர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 ஜியோ நிறுவனம்

அதேசமயம் ஜியோ நிறுவனம் 2.62 லட்ச சந்தாதாரர்களையும், ஏர்டெல் நிறுவனம் 1.19 லட்ச சந்தாதாரர்களையும் புதிதாக பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வீடுகள், அலுவலகம் என அனைத்திலும் பிஎஸ்என்எல் இணைப்பு இருந்த காலம் மாறி 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்பு பிஎஸ்என்எல் அதிக பின்னடைவை சந்தித்து வருகிறது என்பது தான் உண்மை.

ஜியோ 5ஜி சேவை

ஜியோ 5ஜி சேவை

தொலைத்தொடர்புத் துறையின் மொபைல் சேவை, இணைய சேவை, லேண்ட்லைன் சேவை ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஜியோ நிறுவனம் தான் முதலிடம் வகிக்கிறது. மேலும் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை ஆனது நாட்டில் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy: nationalheraldindia

Best Mobiles in India

English summary
Jio has overtaken BSNL, which has been providing landline services for 22 years, to the top spot: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X