என்ன குருநாதா உங்களுக்கு இப்படியொரு சோதனையா? 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ.!

|

ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை அதிகமான டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து ஜியோ நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.

 கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 1.9 கோடி வையர்லெஸ் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 423.83 மில்லியானகக் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

வா தலைவா., இனி வீடே தியேட்டர்தான்: 8கே வீடியோ, 1 பில்லியன் வண்ண ஆதரவுடன் ஒப்போ கே9 ஸ்மார்ட்டிவி- குறைந்த விலை!வா தலைவா., இனி வீடே தியேட்டர்தான்: 8கே வீடியோ, 1 பில்லியன் வண்ண ஆதரவுடன் ஒப்போ கே9 ஸ்மார்ட்டிவி- குறைந்த விலை!

 ஏர்டெல் நிறுவனம் 2.7 லட்சம் புதிய

அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் 2.7 லட்சம் புதிய வையர்லெஸ் வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க் கீழ் இணைத்துள்ளது. எனவே
இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 354.46 மில்லியன் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போச்சா: விஐ பயனர்களுக்கு விழுந்த இடி- ரூ.500 வரை ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு: நவ.,25 முதல் அமல்!போச்சா: விஐ பயனர்களுக்கு விழுந்த இடி- ரூ.500 வரை ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு: நவ.,25 முதல் அமல்!

 வோடபோன் ஐடியா நிறுவனம் 10.7 லட்சம்

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் 10.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 269.99 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே 20.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் வெளியேறி நாட்டின் மொத்த டெலிகாம்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.6 பில்லியன் ஆக உள்ளது என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக மொபைல் போன் செயலிகள் வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்கள்.! எத்தனை தெரியுமா?சட்டத்துக்கு புறம்பாக மொபைல் போன் செயலிகள் வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்கள்.! எத்தனை தெரியுமா?

 அதாவது இந்த கட்டண

மேலும் சமீபத்தில் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கட்டண உயர்வானது வரும் நவம்பர் 25-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. குறிப்பாக ஏர்டெல் விலை உயர்வை அறிவித்ததையடுத்து வோடபோன் ஐடியா விலை உயர்வை அறிவித்துள்ளது.

திடீரென ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. பழைய விலையில் திட்டத்தை வாங்க இது தான் இறுதி வாய்ப்பு..திடீரென ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. பழைய விலையில் திட்டத்தை வாங்க இது தான் இறுதி வாய்ப்பு..

வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களின்

குறிப்பாக வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வின் மூலம் திட்டங்கள் ப்ரீமியம் ரகத்தில் இருக்கிறது. ரூ.500 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்ட விலை உயர்வு குறித்து பார்க்கையில், வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டத்தின்விலை ரூ.2399 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.2899 ஆக இருக்கிறது. திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மைகளுடன் வருகிறது அதோடு இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறித்து பார்க்கையில் இது 365 நாட்கள் செல்லுபடியாகும்.

வெடிக்கும் விவகாரம்: அமேசான்னு சொல்லாதிங்க வாய்ல அடிங்க., வெடிக்கும் விவகாரம்: அமேசான்னு சொல்லாதிங்க வாய்ல அடிங்க., "கஞ்சா கம்பெனினு" சொல்லுங்க- சிஏஐடி குற்றச்சாட்டு!

வோடபோன் ஐடியாவின் ரூ.1499 என்று

அதேபோல் வோடபோன் ஐடியாவின் ரூ.1499 என்று இருந்த திட்டத்தின் விலை தற்போது ரூ.1799 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது 24 ஜிபி டேட்டா மற்றும் 2600 இலவச எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. இது 365 நாட்களுக்குசெல்லுபடியாகும். மேலும் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.699 என்ற இருந்த திட்டத்தின் விலை ரூ.839 ஆக இருக்கிறது, மேலும் ரூ.599 திட்டத்தின் விலை ஆனது ரூ.719 ஆக இருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் முறையே 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் சலுகையோடு வருகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. அதேபோல் ரூ.379-க்கு இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.459 ஆக இருக்கிறது.

News Source: indiatimes.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio has lost 9 million mobile users in September : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X