Home
News

2 புதிய Jio திட்டங்கள் அறிமுகம்.. இலவச NETFLIX சந்தா.. டெய்லி 3GB டேட்டா.. 84 நாட்கள் வேலிடிட்டி.. என்ன விலை?

ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் தான் போஸ்ட் திட்டங்களில் பல்வேறு அசத்தலான சலுகைகளை அறிவித்தது. இந்நிலையில் அசத்தலான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள ப்ரீபெய்ட் திடடங்கள் நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஜியோ நிறுவனத்தின் போஸ்பெய்ட் திட்டங்கள் ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வழங்குகின்றன. ஆனால் ஜியோவின் பட்ஜெட் விலை புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைப்பது இதுவே முதல்முறை ஆகும். இப்போது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த அந்த இரண்டு திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இலவச NETFLIX சந்தாவுடன் 2 புதிய Jio திட்டங்கள் அறிமுகம்!

ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.1099 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்கும் என்பதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டங்கள் விரைவில் ஜியோவின் இணையதளம், மைஜியோ ஆப்ஸ் மற்றும் அனைத்து தளங்களிலும் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும்.

அதேபோல் ஜியோ நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் (Annual General Meeting) வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஜியோவின் வருங்கால திட்டங்கள், புதிய சாதனங்கள் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் இந்த 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் வெளியாகும். குறிப்பாக ஜியோவின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன் கூட ஜியோவின் 46ஆவது ஆண்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே ஜியோபோன் 5ஜி மாடலின் முக்கிய விவரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது. அதாவது LS1654QB5 என்ற மாடல் நம்பரைக் கொண்டுள்ளது ஜியோபோன் 5ஜி மாடல்.

ஜியோபோன் 5ஜி மாடலின் பின்புறம் பிளாஸ்டிக் பேனல் உள்ளது. அதேபோல் இந்த போனின் பின்புறம் மையத்தில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போன் குறைந்த எடை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் (Qualcomm Snapdragon 480 Plus) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 (Android 12 OS) ஓஎஸ் மூலம் இந்த 5ஜி போன் இயங்கும்.

இலவச NETFLIX சந்தாவுடன் 2 புதிய Jio திட்டங்கள் அறிமுகம்!

குறிப்பாக ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். ஜியோபோன் 5ஜி போனுக்கு என்3, என்5, என்28, என்40 மற்றும் என்78 போன்ற 5 க்கும் மேற்பட்ட 5ஜி பேண்ட் சப்போர்ட் கொடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஜியோபோன் 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஜியோபோன் 5ஜி மாடல் அறிமுகமாகும். பின்பு ஜியோபோன் 5ஜி ஆனது ரூ.8000 விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio has launched two prepaid plans offering Netflix mobile subscription: check details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X