Jio அறிமுகம் செய்த ரூ.445 ப்ரீபெயட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாள் வேலிடிட்டி?
ஜியோ (jio) நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட ஜியோ நிறுவனம் வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது ஜியோ நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் தற்போது ரூ.445 விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இது ஒரு பழைய திட்டம் தான். அதாவது ஜியோ ரூ.448 திட்டத்தின் விலை தான் குறைந்துள்ளது. தற்போது ரூ.3 குறைந்து ரூ.445-ஆக உள்ளது. மேலும் இப்போது ஜியோவின் ரூ.445 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 445 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium) ஆகிய முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.
இதுதவிர ஜியோ டிவி பிரீமியம் (JioTV Premium), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆப்களையும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக ஜியோகிளவுட் (JioCloud) சந்தாவை பெற்று கொள்ள முடியும்.
குறிப்பாக டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஜியோவின் ரூ.445 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications