நச்சுனு 4 திட்டங்கள்.. ஹாட்ஸ்டார்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் ஜியோ..
ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டி தரும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக சலுகைகள் வழங்குகிறது ஜியோ நிறுவனம்.
எனவே தான் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை கமக்கள் அதிகம் தேர்வு செய்கிறனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா வழங்கும் 4 அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம் இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ஜியோ ரூ.328 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 328 plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 42ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதாவது ஜியோ ரூ.328 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.328 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.331 திட்டம் (jio rs 331 plan) ஆனது ஒரு டேட்டா திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 40ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஜியோ ரூ.331 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனது இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.388 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 388 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.388 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஜியோ ரூ.388 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 598 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஜியோ ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications