Home
News

அம்பானி அசத்தல்.. வருமானம் குறைவான Jio கஸ்டமர்களுக்கான ஸ்பெஷல் திட்டங்கள்.. ஆர்வத்தை கிளப்பும் அறிக்கை!

ஸ்டேடிஸ்டாவின் (Statista) தரவை மேற்கோள் காட்டி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆனது அதன் ஏர்பைபர் சேவை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் உள்ள, குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை இலக்காக கொண்டு ஜியோ தனிப்பயனாக்கப்பட்ட ஏர்ஃபைபர் திட்டங்களை வழங்குவது குறித்த அறிவிப்பும் அடங்கும்.

டெலிகாம்டால்க் (Telecom Talk) வழியாக கிடைத்த இந்த சமீபத்திய அறிக்கையில் "இந்த ஸ்பெஷல் திட்டங்கள்"கிடைக்கும் சரியான இடங்கள் அல்லது பிராந்தியங்கள் குறித்த விவரங்கள் பகிரப்படவில்லை. இந்த அறிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் ஏர்ஃபைபர் 5ஜி சேவையானது பஞ்சாப் மாநிலத்தில் டிஜிட்டல் புரட்சியை வழிநடத்தி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை மாற்றியமைத்துள்ளதை பற்றி அதிகம் பேசுகிறது.

வருமானம் குறைவான Jio கஸ்டமர்களுக்கான ஸ்பெஷல் திட்டங்கள்: அறிக்கை!

ஸ்டேடிஸ்டாவின் தரவை மேற்கோள் காட்டிய ஜியோ, 2014 இல் சுமார் 14 சதவீதத்திலிருந்த இந்தியாவின் இணைய ஊடுருவல் விகிதம் 2024 இல் 52 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பஞ்சாப் முழுவதும் உள்ள மக்கள் இப்போது உண்மையான டிஜிட்டல் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். புதுமைகள் மூலம் பஞ்சாப் மக்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம் என்றும் ஜியோ கூறியுள்ளது.

ஏப்ரல் 2025 நிலவரப்படி, டிராய் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ரிலையன்ஸ் ஜியோவின் மொத்தம் 5ஜி எப் டபுள்யூஏ (FWA) சந்தாதாரர் தளம் - 6,141,270 (6.14 மில்லியன்) ஆகும். இதில் 2,774,249 கிராமப்புற சந்தாதாரர்கள் ஆவர் மற்றும் பஞ்சாபிலிருந்து 399,922 சந்தாதாரர்கள் உள்ளனர். தனது ஏர்ஃபைபர் சேவைகள் மூலம் "கடைசி மைல் இணைப்பின் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது" என்றும் ஜியோ கூறியுள்ளது

சமீபத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொபைல் கேமிங் ஆர்வலர்களுக்கான ஜியோ கேம்ஸ் கிளவுட் (Jio Games Cloud) அணுகலை வழங்கும் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ரூ.48 முதல் தொடங்கும் இந்த திட்டங்கள் - குறுகிய கால கிளவுட் கேமிங் பாஸ்கள் முதல் டேட்டா, வாய்ஸ் மற்றும் ஃபேன்கோட் மற்றும் ஜியோடிவி போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான அணுகல் உட்பட பல நன்மைகளை வழங்குகின்றன.

1. ஜியோ ரூ.48 கேமிங் ஆட்-ஆன் திட்டம்: இந்த தொகுப்பில் மிகவும் மலிவு விலை நிர்ணயம் கொண்ட திட்டம் ரூ.48 கேமிங் ஆட்-ஆன் பிளான் தான். இது ஜியோ கேம்ஸ் கிளவுட்டுக்கு 3 நாள் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் எந்த டேட்டா அல்லது குரல் / எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது; இது ஜியோ கேம்ஸை அணுகுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.

2. ஜியோ ரூ.98 கேமிங் ஆட்-ஆன் திட்டம்: ரூ.98 மதிப்புள்ள இந்த கேமிங் ஆட்-ஆன் ஜியோ கேம்ஸ் கிளவுட் சந்தாவை 7 நாட்களுக்கு வழங்குகிறது இதுவும் எந்த டேட்டா அல்லது குரல் / எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது; இது ஜியோ கேம்ஸை அணுகுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.

3. ஜியோ ரூ.298 கேமிங் ஆட்-ஆன் திட்டம்: ரூ.298 இன் கீழ் பயனர்கள் 28 நாட்கள் ஜியோ கேம்ஸ் கிளவுட் அணுகலையும் 3ஜிபி அதிவேக டேட்டாவையும் பெறுவார்கள். டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் சநன்மைகள் இருக்காது.

4. ஜியோ ரூ.495 சந்தா திட்டம்: இந்த திட்டம் கேமிங்கை விட அதிகமாக வழங்குகிறது. ஜியோ கேம்ஸ் கிளவுட், ஃபேன்கோட், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகியவற்றிற்கான 28 நாள் சந்தாவை வழங்குகிறது. மேலும் பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி மற்றும் 5 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறுவார்கள். கூடவே 90 நாள் ஜியோசினிமா சந்தா மற்றும் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கும்.

5. ஜியோ ரூ.545 கேமிங் திட்டம்: இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா + 5 ஜிபி போனஸ், ஜியோ கேம்ஸ் கிளவுட், ஃபேன்கோட், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகிய நன்மைகள் 28 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் இது ரூ.495 திட்டத்தை போலவே வாய்ஸ்மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தக்கவைத்து கொள்கிறது. கூடுதலாக, பயனர்கள் 90 நாட்களுக்கு ஜியோசினிமா மொபைல்/டிவி சந்தா மற்றும் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜையும் பெறுவார்கள்

Source: Telecom Talk

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio has customised JioAirFiber plans for low income groups in rural India Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X