Jio கொண்டுவந்த புது ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே விரும்பும் பயனர்களுக்கு இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதேபோல் ஜியோ நிறுவனமும் தற்போது அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே விரும்பும் பயனர்களுக்கு இரண்டு ப்ரபெய்ட் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதாவது அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை விரும்பும் ஜியோ பயனர்கள் இனி ரூ.1748 மற்றும் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்யலாம். இப்போது இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 1748 plan Details) அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ 448 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 448 plan Details) ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க
குறிப்பாக ஜியோ ரூ 448 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud)போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் மட்டும் தேவைப்படும் ஜியோ பயனர்கள் இந்த இரண்டு திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை அதிக டேட்டா, ஓடிடி, வாய்ஸ் கால்கள் நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








