சத்தமில்லாமல் இரண்டாம் காலண்டில் 73 லட்சம் பயனர்களை ஈட்டிய ஜியோ நிறுவனம்.!
ஜியோ நிறுவனத்தின் திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக இருக்கிறது.

இந்த தகவலை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது வருவாய் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் புதிதாக 73 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து உள்ளது. முந்தைய காலாண்டில் ஜியோ நிறுவனம்புதிதாக 99 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருந்தது.

குறிப்பாக இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து பெற்ற வருவாய் ரூ.145 ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 3.2 சதவீதம் வரை அதிகம் ஆகும்.

மேலும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஜியோ வருடாந்திர அளவில் 13.96 வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.59 கோடிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு வந்த தகவலின்படி ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.5000-க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 முதல் 3500 வரை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் 5ஜி கட்டமைப்புப் பணிக்காக உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவமான குவால்காம் உடன் ஜியோ கைகோர்க்க உள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நாட்டின் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மெய்நிகராகப்பட்ட ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் மூலம் 5ஜி சேவையை தொடங்க ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக குவால்காம் 5ஜி RAN இயங்குதளங்களைப் பயன்படுத்தும் ரிலையன்ஸ் ஜியோ 5GNR மென்பொருளில் 1 Gbps மைல்கல்லை எட்டியுள்ளதாக ஜியோ மற்றும் குவால்காம் ஒன்றாக அறிவித்துள்ளன.

மேலும் குவால்காம் 5ஜி உச்சிமாநாட்டின்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவர் மேத்யூ ஓம்மன் கூறுகையில், புதிய தலைமுறைக்கான கிளவுட் நேட்டிவ் 5ஜி RAN தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் குவால்காம் டெக்னாலஜிஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழச்சியடைகிறோம். ஜியோ இயங்குதளங்கள் மற்றும் ஸ்கேல் இணைந்து குவால்காம் டெக்னாலஜிஸுடன் பாதுகாப்பான RAN தீர்வுகளின் மேம்பாடு உள்ளூர் உற்பத்திக்கான சிறந்த கலவையை வழங்குகிறது என்று மேத்யூ ஓம்மன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications