கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio.. தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்!

|

நீங்கள் கொடுத்த முழு பணமும் 100% உங்களுக்கே திருப்பி கொடுக்கும் ஒரு ஆபர் இருக்கிறது என்று கூறினால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும்! இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, ஒரு நம்பமுடியாத தீபாவளி ஆபரை (Jio Diwali Offer 2022) அறிவித்து உள்ளது.

டபுள் பெஸ்டிவல் போனான்ஸா (Double Festival Bonanza) என்கிற பெயரின் கீழ் அணுக கிடைக்கும் இந்த ஜியோ சலுகையின் வழியாக, நீங்கள் செலவழித்த பணம் மொத்தமும் உங்களுக்கு திருப்பி வழங்கப்படுகிறது.

ஜியோவின் ஃபுல் மணி பேக் ஆபர்!

ஜியோவின் ஃபுல் மணி பேக் ஆபர்!

இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டாலும் கூட, அது சர்வசாதாரணமாக மாற இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும். அதுவரையிலாக, இன்டர்நெட் தேவைகளுக்கு நாம் 4ஜி சேவைகளைத்தான் நம்பி இருக்க வேண்டும்!

இந்த விஷயத்தை ரிலையன்ஸ் ஜியோவும் நன்கு அறியும், அதனால் தான் முழு பணத்தையும் திருப்பி கொடுக்கும் 'ஃபுல் மணி பேக் ஆபர்' என்கிற சலுகையை அறிவித்துள்ளது!

ஒரு பால் கூட விடக்கூடாது! T20 உலக கோப்பை போட்டிகளின் FREE LIVE-ஐ பார்ப்பது எப்படி?ஒரு பால் கூட விடக்கூடாது! T20 உலக கோப்பை போட்டிகளின் FREE LIVE-ஐ பார்ப்பது எப்படி?

கொடுத்த பணம் அப்படியே திரும்பி கிடைக்கும்!

கொடுத்த பணம் அப்படியே திரும்பி கிடைக்கும்!

ஜியோ அறிவித்துள்ள 'ஃபுல் மணி பேக் ஆபர்' ஆனது நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையின் கீழ் அணுக கிடைக்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு புதிய ஜியோ ஃபைபர் வாடிக்கையாளராகும் பட்சத்தில் இந்த சலுகையின் கீழ் உங்களுக்கு "100% வேல்யூ பேக்' கிடைக்கும்.

அதாவது, இதற்காக நீங்கள் செலவழிக்கும் மொத்த பணமும் உங்களுக்கு திருப்பி தரப்படும் என்று அர்த்தம்!

அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே!

அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே!

புதிய பிராட்பேண்ட் சேவைக்காக நீங்கள் செலவு செய்த மொத்த பணமும் திருப்பி தரப்படும் என்றதுமே அது பணமாக கிடைக்கும் என்று நினைத்து விட வேண்டாம்.

மாறாக, நீங்கள் செலவு செய்த பணத்திற்கு இணையான வவுச்சர்களாக அணுக கிடைக்கும். மேலும் ஜியோவின் இந்த தீபாவளி சலுகையானது, வருகிற 2022 அக்டோபர் 28 வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!

ரூ.599 அல்லது ரூ.899 - இரண்டில் ஒன்று!

ரூ.599 அல்லது ரூ.899 - இரண்டில் ஒன்று!

ஜியோவின் இந்த தீபாவளி சலுகையின் கீழ் ஒருவர் ரூ.6,500 வரை மதிப்புள்ள பலன்களை பெறுவார். அதற்காக அவர், ரூ.599 மதிப்புள்ள ஜியோ ஃபைபர் திட்டத்தையோ அல்லது ரூ.899 மதிப்புள்ள ஜியோ ஃபைபர் திட்டத்தையோ தேர்வு செய்ய வேண்டும்.

மேற்கூறிய ஏதேனும் ஒரு திட்டத்தை, குறைந்தபட்சம் ஆறு மாத சந்தாவை நீங்கள் வாங்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு 100% வேல்யூ பேக் வவுச்சர்கள் அணுக கிடைக்கும்.

ஆறு மாத சந்தா என்றால்.. எவ்வளவு செலவு ஆகும்?

ஆறு மாத சந்தா என்றால்.. எவ்வளவு செலவு ஆகும்?

ரூ.599 திட்டத்தின் 6 மாத சந்தாவின் விலை (ஜிஎஸ்டி உட்பட) ரூ.4,241 ஆகும். அதே சமயம் ரூ.899 திட்டத்தின் 6 மாத சந்தாவின் விலை (ஜிஎஸ்டி உட்பட) ரூ.6,365 ஆகும்.

நீங்கள் ரூ.599-ஐ தேர்வு செய்தால், உங்களுக்கு ரூ.4,500 மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும், அதே சமயம் ரூ.899 திட்டத்தை தேர்வு செய்தால் ரூ.6,500 மதிப்பிலான பலன்கள் கிடைக்கும்.

இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

அதென்ன பலன்கள்?

அதென்ன பலன்கள்?

முதல் திட்டத்தின் கீழ், AJIO-க்கான ரூ.1,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கான ரூ.1,000 வவுச்சர், NetMeds-க்கான ரூ.1,000 வவுச்சர் மற்றும் Ixigo-விற்கான ரூ.1,500 வவுச்சர் அணுக கிடைக்கும்.

இரண்டாவது திட்டத்தின் கீழ், AJIO-க்கு ரூ.2,000 மதிப்புள்ள வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கு ரூ.1,000 வவுச்சர், NetMeds-க்கான ரூ.500 வவுச்சர் மற்றும் Ixigo-விற்கான ரூ.3,000 வவுச்சர் அணுக கிடைக்கும்.

15 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி!

15 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி!

மேற்கூறிய வேல்யூ பேக் வவுச்சர்களுடன் சேர்த்து, ஜியோவின் இந்த தீபாவளி சலுகையின் கீழ், ஒவ்வொரு திட்டத்திலும் 15 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டியும் சேர்க்கப்படும்.

அதாவது நீங்கள் தேர்வு செய்யும் திட்டம் - மொத்தம் ஆறு மாதங்கள் மற்றும் 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று அர்த்தம்!

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

போதாக்குறைக்கு.. இலவச செட்-டாப் பாக்ஸ் வேற!

போதாக்குறைக்கு.. இலவச செட்-டாப் பாக்ஸ் வேற!

ஜியோ ஃபைபர் மீதான இந்த தீபாவளி சலுகையை இன்னும் இனிமையாக்கும் படி, மேற்கூறிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6,000 மதிப்புள்ள 4K ஜியோஃபைபர் செட்-டாப் பாக்ஸும் இலவசமாக கிடைக்கும்.

ஆகமொத்தம், ஒரு புதிய ஜியோ ஃபைபர் கனெக்ஷனை பெறுவதற்கு இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது!

Best Mobiles in India

English summary
Jio Gives Back All Your Money You Spend For New Broadband Connection Under New Diwali Offer 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X