ஜியோவுக்கு போட்டியாக இலவசத்தை அள்ளிவீசும் வோடாபோன்.!
இந்திய தொலைபேசி சந்தையில் நுழைந்த பிறகு ஜியோ நிறுவனம் பல்வேறு இலவச சலுகைகளை அறிவித்தது. இதையடுத்து ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி வருகின்றது.
இந்திய தொலைபேசி சந்தையில் நுழைந்த பிறகு ஜியோ நிறுவனம் பல்வேறு இலவச சலுகைகளை அறிவித்தது. இதையடுத்து ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி வருகின்றது.

மேலும் ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் புதிய வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதமாக பல்வேறு நிறுவனங்களுக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அளித்து வருகின்றனர்.

ஜியோ நிறுவனம்:
ஜியோ நிறுவனத்தின் அளவில்லா அழைப்புகள், மிஸ்டு கால், காலர் டியூன், ரோமிங், மெஸ்சேஞ் உள்ளிட்டவை முதலில் இலவசமாக அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் பெற்றது.

குறைந்த கட்டணம்:
ஜியோ நிறுவனம் குறைந்த கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது.இதனால் தற்போது கூடுதலாக வாடிக்கையாளர்களை ஈர்த்தது. மேலும், மற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களும் ஜியோவில் இணைந்தனர்.

ஜியோவின் வெற்றி:
இந்நிலையில் ஜியோ நிறுவனம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜியோ கிகா பைபர் சேவையையும் பல்வேறு சலுகைகளுடன் அறிவித்தது ஜியோ கிகா பைபர் நிறுவனம். தற்போது முன்பதிவு தொடங்கி ஒரு சில இடங்களில் சேவையும் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

ஜியோவுக்கு போட்டியான வோடபோன்:
ஜியோவின் ஜிகா பைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனில் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.

யுபிராட் பேன்ட் சேவை:
யு பிராட் பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரெடு செய்யும் போது, நான்கு மாதங்களுக்கு கூடுதல் வேலிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது.

16 மாத சேவை:
ஆண்டு சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவையை பயன்படுத்த முடியும். இதே போன்று காலாண்டு அல்லது அரையாண்டு வரை திட்டங்கள் ரீசார்ஜ் செய்வோருக்கு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை செப்டம்பர் 30ம் தேதி வரை வழங்கப்படுகின்றது.

மேலும் இலவச சேவை:
இலவச சேவையைமேலும் பெற வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் யு பிராட்பேன்ட் அதிகாரப்பூர்வ வளைத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஆகும்.

இலவசங்கள்:
ஒரு மாத திட்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் மூன்று மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது ஒரு மாதம் இலவசமாகவும், ஆறு மாத திட்டத்திற்கு இரண்டு மாதங்கள் மற்றும் பன்னிரெண்டு மாதங்களுக்கு நான்கு மாதங்கள் இலவச சேவை வழங்கப்படும் என யு பிராட்பேன்ட அறிவித்துள்ளது.

12 மாத அப்கிரேடு :
தற்சயம் காலாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் ஆறு மாதங்கள் அல்லது பன்னிரெண்டு மாதங்களுக்கான திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். இதேபோன்று அரையாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 12 மாத திட்டத்திற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications