ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.!

ஜியோ தனது ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ. 1000 குறைந்தது 40 சாதனங்களை வழங்கும்

|

தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது பிராட்பேண்ட், லேண்ட்லைன் போன் மற்றும் டிவி சேவை என மூன்றையும் சேர்த்து மாதம் ரூ.600 வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரூ.600க்கு ஜிகாஃபைபர் :  லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.!

இப்போதைக்கு ஜியோ தனது ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ. 1000 குறைந்தது 40 சாதனங்களை வழங்கும் என்றும் மிகவிரைவில் ஜியோ ஜிகாஃபைபரை நாடு முழுவதும் வர்த்தக ரீதியாக தொடங்க வழிவகை செய்யப்ப்டும் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி மற்றும் மும்பை

டெல்லி மற்றும் மும்பை

டெல்லி மற்றும் மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜிகாஃபைபரை பயன்படுத்த ஒருமுறை கட்டணமாக ரூ.4500 செலுத்திவிட்டால் வினாடிக்கு 100 எம்பி வேகத்தில் 100 ஜிபி டேட்டாவை இலவசமாக தர முடிவு செய்துள்ளது. இது ஒரு சோதனையாக செய்யப்படவுள்ளது. இந்த சேவையில் தொலைக்காட்சி சேவை மற்றும் டெலிபோன் சேவை ஆகியவை அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும்

 பிராட்பேண்ட்

பிராட்பேண்ட்

சமீபத்தில் கூறியபடி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜிகாஃபைபர் சேவையை 1600 நகரங்களில் வீடுகளில் பிராட்பேண்ட், எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்மார்தோம் சொலுஷன், வயர்லைன் மற்றும் எண்டர்பிரைசஸ் ஆகியவை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது

டென் நெட்வொர்க் லிமிடெட்

டென் நெட்வொர்க் லிமிடெட்

டென் நெட்வொர்க் லிமிடெட் மற்றும் ஹாத்வே கேபிள் மற்றும் டேட்டாகாம் லிமிடெட் ஆகியவற்றின் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி ஆரம்பகட்ட பணிகள் முடிந்தவுடன் ஜிகாஃபைபர் தனது சேவையை சோதனை சேவைக்கு பின் நாடு முழுவதும் வெற்றிகரமாக தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனங்களில் தலைவர் மற்றும் மேனேஜிங் டைரக்டரான முகேஷ் அம்பானி இதுகுறித்து கூறியபோது, 'மொபைல் சேவைகளில் எங்களது வெற்றிகரமான சேவையை அடுத்து, அடுத்த தலைமுறையினர்களுக்கு உதவும் வகையில் வீடுகளில் உலக தரத்தில் இண்டர்நெட் மற்றும் தொலைக்காட்சி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் சர்வீஸ் மற்றும் ஜிகாஃபைபர் என்ற டெக்னாலஜி சேவைகள் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெக்னாலஜி பிரிவு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ரூ.540 கோடி

ரூ.540 கோடி

இந்த நிலையில் ஜியோ நிறுவனம் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு காலத்தில் ரூ.840 கோடி லாபத்தை பெற்றுள்ளதாக, கடந்த ஆண்டு இதே நிறுவனம் ரூ.540 கோடி லாபத்தை பெற்றுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின்மூலம் கூறியுள்ளது

Best Mobiles in India

English summary
Jio GigaFiber to offer broadband, landline, TV services at Rs. 600 per month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X