மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் அறிவிப்பு! 4K LED டிவி, 4Kசெட்-டாப் இலவசம்!

|

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை இன்று காலை வெகு விமர்சையாக துவங்கியது. அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தபடி இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்ஸை இலவசமாக வழங்கும் ஜியோ!

அத்துடன் கூடுதலாக யாரும் எதிர்பார்த்திடாத அறிவிப்பையும் முகேஷ் அம்பானி வெளியிட்டிருக்கிறார். 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்ஸை இலவசமாக வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

340 மில்லியன் வாடிக்கையாளர்கள்

340 மில்லியன் வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் ஜியோ, இன்று தனது மூன்றாவது ஆண்டில் கால் எடுத்து வைக்கிறது. இதுவரை ஜியோ நிறுவனம் சுமார் 340 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க்கில் சேர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இத்துடன் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட சுமார் 10 மில்லியன் புதிய பயனர்களையும் தனது நெட்வொர்க்கில் சேர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக ஜியோ

உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக ஜியோ

ஜியோ இந்தியாவில் மிகப்பெரிய ஆப்பரேட்டர் நிறுவனமாக உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் தலை சிறந்த நிறுவனமாக ஜியோ இடம்பிடித்துள்ளது. அதேபோல் உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக ஜியோ மாறியுள்ளது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.

<strong>ரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம்: தடபுடலாக விலையை குறைத்த ஏர்டெல்.!</strong>ரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம்: தடபுடலாக விலையை குறைத்த ஏர்டெல்.!

 100Mbps வேகம் முதல் 1Gbps வரை

100Mbps வேகம் முதல் 1Gbps வரை

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ஜிகாஃபைபர் சேவை வெற்றிகரமாக இந்தியாவில் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் துவக்க வேகமாக 100Mbps வேகம் முதல் 1Gbps வரை கிடைக்கும்படி சுமார் 5 லட்சம் பயனர்களிடம் சோதனை செய்து ஜியோ ஜிகாஃபைபர் சேவையை உருவாகியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோ ஃபைபர் கட்டண விபரம்

ஜியோ ஃபைபர் கட்டண விபரம்

ஜியோ ஃபைபர் செப்டம்பர் 5, 2019 முதல் இந்தியா முழுவதும் வணிக அடிப்படையில் தொடங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ ஃபைபர் பின்வரும் கட்டண விபரங்களுடன் பின்தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரைக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>2020 மிஷனுக்காக அடுத்த தலைமுறை விண்கலனுடன் கலக்க போகும் நாசா.!</strong>2020 மிஷனுக்காக அடுத்த தலைமுறை விண்கலனுடன் கலக்க போகும் நாசா.!

Jio 1st Day 1st Show சேவை

Jio 1st Day 1st Show சேவை

வாய்ஸ் காலிங் மற்றும் அனைத்து சேவைகளும் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் காலிங் சேவை மாதத்திற்கு வெறும் ரூ.500 என்ற விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக Jio 1st Day 1st Show என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ செட்டப் பாக்ஸ்

ஜியோ செட்டப் பாக்ஸ்

இந்த புதிய சேவையின்படி ஜியோ பயனர்களை தியேட்டரில் வெளியாகும் புதிய திரைப்படங்களை முதல் நாள் முதலே அவர்களின் டிவியில் பார்த்துக்கொள்ளலாம். ஜியோ ஃபைபர் டிவியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ செட்டப் பாக்ஸ் உதவியுடன் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் துவங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>யூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த" title="யூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த" காரியத்தை செய்தவர் கைது.!" loading="lazy" width="100" height="56" />யூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த" காரியத்தை செய்தவர் கைது.!

ஜியோ போஸ்ட்பைட் பிளஸ்

ஜியோ போஸ்ட்பைட் பிளஸ்

ஜியோ போஸ்ட்பைட் பிளஸ் என்ற புதிய சேவையின் மூலம், ஜியோ பயனர்கள் ஒரு திட்டத்தைத் தேர்வு செய்து குடும்பத்தினருடன் பல சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இந்த ஜியோ ஃபைபர் சேவையைப் பெறப் பயனர்கள் jio.com அல்லது myjio செயலியைப் பயன்படுத்தலாம்.

இலவச 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்

இலவச 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்

ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்காமல் இருந்ததே இல்லை, அதேபோல் இம்முறையும் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ஜியோ ஃபைபர் நீண்ட கால வருடாந்திர திட்டத்தை எடுக்கும் பயனர்களுக்கு இலவசமாக 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்ஸை வழங்கவுள்ளதாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Jio GigaFiber Launched At Reliance AGM 2019 4K Tv Jio Set-Top Box For Free : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X