Home
News

ஜியோ ஜிகா பைபர் திட்டத்திற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல் 40ஜிபி திட்டம்.! விலை என்ன தெரியுமா?

புதிதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம், ஜியோ ஜிகா பைபர் திட்டத்திற்கு எதிராக 40ஜிபி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம், ஜியோ ஜிகா பைபர் திட்டத்திற்கு எதிராக 40ஜிபி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி பயனருக்குத் தினமும் 40ஜிபி டேட்டா 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் ஒரு மாத காலத்திற்கு வழங்கப்படுமென்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 40ஜிபி திட்டம்

40ஜிபி திட்டம்

ஒரு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாரத் ஃபைபர் திட்டத்தின் கீழ் இந்த 40ஜிபி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பைபர் டு தி ஹோம் (FTTH)

பைபர் டு தி ஹோம் (FTTH)

கூடுதலாக இந்த திட்டம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.777, ரூ.1,277, ரூ.3,999 மற்றும் ரூ.5,999 ஆகிய திட்டத்துடன் பைபர் டு தி ஹோம் (FTTH) திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

 40ஜிபி வெறும் ரூ.2,499 விலையில்

40ஜிபி வெறும் ரூ.2,499 விலையில்

இந்த புதிய 40ஜிபி திட்டத்திற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.2,499 என்று விலை நிர்ணயம் செய்துள்ளது. தினமும் 40ஜிபி டேட்டா 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் பயனருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் சலுகை

கூடுதல் சலுகை

ஜியோ நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நேரடியாகப் போட்டியிட துவங்கி, தனது பயனர்களுக்கு நம்ப முடியாத சலுகையை வழங்கியுள்ளது. இதே போன்று இன்னும் பல கூடுதல் சலுகைகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறந்த திட்டங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். ஜியோவின் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.19 முதல் துவங்கி ரூ.9,999 என்ற விலை வரையிலான திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.98 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.98 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ், பயனருக்கு வரம்பற்ற அழைப்பு விருப்பம், 300 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா மற்றும் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் 2ஜிபி டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

ரூ.299 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.299 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

நீங்கள் திரைப்படம் அல்லது டிவி தொடர் அல்லது வெறுமனே யூடியூப் இல் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் ஒருவர் என்றால், ரூ. 299 திட்டம் ஒரு சிறந்த பட்ஜெட் திட்டமாக உங்களுக்கு அமையும். இத்திட்டத்தின் கீழ் பயனருக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா சேவை, வரம்பற்ற அழைப்பு விருப்பம், 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ரூ.398 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.398 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ், பயனருக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா சேவை, வரம்பற்ற அழைப்பு விருப்பம், 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சாந்தா மற்றும் 70 நாட்கள் வேலிடிட்டியுவான் வழங்கப்படுகிறது.

ரூ.1699 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.1699 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ், பயனருக்குத் தினசரி 1.5ஜிபி டேட்டா சேவை(மொத்த 547.5 ஜி.பி), வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும், மற்ற திட்டங்களைப் போலவே அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

ரூ.9999 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ.9999 ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் :

இந்தத் திட்டத்தின் கீழ் பயனருக்கு மொத்தமாக 750 ஜிபி டேட்டா சேவைவழங்கபடுகிறது. அத்துடன் வரம்பற்ற அழைப்பு விருப்பம், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் மற்றும் 360 நாட்கள் செல்லுபடியாகும் 100 தினசரி எஸ்எம்எஸ் போன்ற அனைத்துச் சேவைகளும் ஒன்றாய் வழங்கப்படுகிறது.

ஜியோ ஜிகாஃபைபர்

ஜியோ ஜிகாஃபைபர்

ஜியோ ஜிகாஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவைகள் கடந்த ஒரு வருடமாகப் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் பயனருக்கு வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர்

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர்

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர் ஆனால் சரியான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்தியாவில் மிக விரைவில் ஜியோ ஜிகாஃபைபர் இணைப்பு 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் நடைமுறைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஃபைபர் இன் ஹோம்

ஃபைபர் இன் ஹோம்

ஃபைபர் இன் ஹோம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாஃபைபர் "ஃபைபர் இன் ஹோம்" சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் ப்ரீவியூ திட்டம்

ஜியோ ஜிகாஃபைபர் ப்ரீவியூ திட்டம்

ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் மற்றும் விலைகள் அறிவிக்கப்படாவிட்டாலும், தொடக்க ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் ரூ.500 என்ற விலையில் 100Mbps வேகத்தில் 300GB வரை டேட்டா வழங்கப்படும். அத்துடன் ஜியோ ஜிகாஃபைபர் ப்ரீவியூ திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் அனைத்து புதிய ஜியோ ஜிகாஃபைபர் இணைப்புகளுக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு 100Mbps வேகத்தில் இல் 100ஜிபி டேட்டா வழங்கப்படும்

டெபாசிட் தொகை

டெபாசிட் தொகை

டெபாசிட் தொகை விபரம் புதிய ஜியோ ஜிகாஃபைபர் இணைப்புகளுக்குப் பயனர்கள் முதலில் ரூ.4,500 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும், இந்தத் தொகைக்கு திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் கட்டண தொகைக்கு ஜியோ ஜிகாஃபைபர் மற்றும் ஜியோ ஜிகா டிவி ரௌட்டர்கள் வழங்கப்டும், இவற்றிற்கான இன்ஸ்டாலேஷன் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

1,100 இந்திய நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர்

1,100 இந்திய நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர்

1,100 இந்திய நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை ஆரம்பத்தில் 1,100 இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, ஜியோ ஜிகாஃபைபர் 700Mbps வரையிலான சராசரி வேகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio GigaFiber Effect: BSNL launches Rs 2,499 broadband plan with 40GB daily data limit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X