களமிறங்கும் ஜியோ ஜிகாஃபைபர்.! கட்டாயம் நீங்கள் அறிய வேண்டிய விபரங்கள்.!

ஜியோ ஜிகாஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவைகள் கடந்த ஒரு வருடமாகப் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.

|

ஜியோ ஜிகாஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவைகள் கடந்த ஒரு வருடமாகப் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் பயனருக்கு வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர்

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர்

ஆனால் சரியான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்தியாவில் மிக விரைவில் ஜியோ ஜிகாஃபைபர் இணைப்பு 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் நடைமுறைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"ஃபைபர் இன் ஹோம்

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாஃபைபர் "ஃபைபர் இன் ஹோம்" சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் திட்டம்

ஜியோ ஜிகாஃபைபர் திட்டம்

ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் மற்றும் விலைகள் அறிவிக்கப்படாவிட்டாலும், தொடக்க ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் ரூ.500 என்ற விலையில் 100Mbps வேகத்தில் 300GB வரை டேட்டா வழங்கப்படும். அத்துடன் ஜியோ ஜிகாஃபைபர் ப்ரீவியூ திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் அனைத்து புதிய ஜியோ ஜிகாஃபைபர் இணைப்புகளுக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு 100Mbps வேகத்தில் இல் 100ஜிபி டேட்டா வழங்கப்படும்.

டெபாசிட் தொகை விபரம்

டெபாசிட் தொகை விபரம்

புதிய ஜியோ ஜிகாஃபைபர் இணைப்புகளுக்குப் பயனர்கள் முதலில் ரூ.4,500 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும், இந்தத் தொகைக்கு திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் கட்டண தொகைக்கு ஜியோ ஜிகாஃபைபர் மற்றும் ஜியோ ஜிகா டிவி ரௌட்டர்கள் வழங்கப்டும், இவற்றிற்கான இன்ஸ்டாலேஷன் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

1,100 இந்திய நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர்

1,100 இந்திய நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர்

ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை ஆரம்பத்தில் 1,100 இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, ஜியோ ஜிகாஃபைபர் 700Mbps வரையிலான சராசரி வேகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio GigaFiber broadband services expected India rollout this year Plans prices installation and all we know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X