Home
News

புது ஆஃபர்.. ரூ.545-க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் டேட்டா.. BGMI ஸ்கின்.. வாய்ஸ் கால்கள்.. கேமிங் ஆஃபர்!

ஜியோ (Jio) கஸ்டமர்களில் கேமிங் பிரியர்களாக இருக்கும் ஒட்டுமொத்த பேரையும் தட்டித்தூக்கும்படி 2 புதிய கேமிங் திட்டங்கள் (Gaming Plan) களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையுடன் ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud), பிஜிஎம்ஐ (BGMI) போன்ற சலுகைகளையும் கொடுக்கிறது. இதுபோக 2 ஓடிடி சந்தா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற எக்கச்சக்க சலுகைகளை கொடுக்கிறது. இந்த ஜியோ கேமிங் திட்டங்களின் விவரங்களை இப்போது, தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ கேமிங் திட்டம் ரூ 545 விவரங்கள் (Jio Gaming Plan Rs 545 Details): இந்த கேமிங் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 5 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 61 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

புது ஆஃபர்.. ரூ.545-க்கு இறக்கிய அம்பானி! அன்லிமிடெட் டேட்டா.. கேமிங்!

இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா மற்றும் ஒரு மாதத்துக்கான ஃபேன்கோட் (FanCode) சந்தா கொடுக்கப்படுகிறது. ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வருகிறது.

கேமிங் சலுகைகள் (Gaming Offers): இந்த ஜியோ திட்டத்தில் ஜியோ கேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை மற்றும் பிஜிஎம்ஐ (BGMI) சலுகை கிடைக்கிறது. இந்த கேமிங் சலுகையை பிசி (PC), லேப்டாப் மற்றும் மொபைலில் பயன்படுத்தலாம். இதில் 500+ எச்டி பிரீமியம் கேமிங் கிடைக்கும். இதுபோக பிஜிஎம்ஐ ஸ்கின் கூப்பன் (BGMI Skin Coupon) கிடைக்கிறது.

இந்த கூப்பன்களை மைஜியோ (MyJio) ஆப் மூலம் கேட்களாக மாற்றி கொள்ளலாம். இதை பிஜிஎம்ஐ ரிவார்ட்ஸ் பேஜ் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ கேமிங் ஆப் மூலம் மட்டுமே ஜியோகேம்ஸ் கிளவுட் சேவையை பயன்படுத்த முடியும். ஆகவே, அதை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளுங்கள். இப்போது, அடுத்த திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.

ஜியோ கேமிங் திட்டம் ரூ 495 விவரங்கள் (Jio Gaming Plan Rs 495 Details): இந்த ஜியோ கேமிங் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்த பெரும்பாலான சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், டேட்டா சலுகைகளில் மட்டும் கம்மியாக இருக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 2 ஜிபி டேட்டா கிடைத்தது, ஆனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.

அதேபோல இந்த கேமிங் திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடையாது. இருப்பினும், 5 ஜிபி கூடுதல் டேட்டா அப்படியே கிடைக்கிறது. இதை தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, ஜியோ கேம்ஸ் கிளவுட், பிஜிஎம்ஐ, ஃபேன்கேட், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை வருகிறது. அதேபோல பிஜிஎம்ஐ ஸ்கின் கூப்பன்கள் வருகிறது.

இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஃபேன்கோட் ஓடிடிக்கு 28 நாட்கள் சந்தா கிடைக்கும். ஆனால், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் ஓடிடிக்கு 90 நாட்கள் சந்தா கிடைக்கும். ஆகவே, திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்தால், ஜியோஹாட்ஸ்டார் தொடர்ந்து கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Gaming Plan Rs 545 With BGMI Skins JioGames Cloud Unlimited Voice Calls Check New Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X