Home
News

Jio சிம் இருக்கா.. இனிமே ரூ.355-க்கு வருது.. 25GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30 நாட்கள் ஃப்ரீடம் திட்டம்!

ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்குகூட ஃப்ரீடம் திட்டம் (Freedom Plan) பற்றி தெரிந்திருக்காது. லம்ப்-சம் டேட்டாவில் கிடைக்கும் இந்த திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி ஆப்களை கொடுக்கிறது. இனிமேல் மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிடும் கஸ்டமர்கள் இப்படிவொரு திட்டம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஜியோ நிறுவனத்தில் 1 ஜிபி, 1.5 ஜிபி, 2 ஜிபி, 2.5 ஜிபி போன்று டேட்டாவுக்கு திட்டங்கள் இருப்பதை போல, வேல்யூ திட்டங்கள், பொழுதுபோக்கு திட்டங்கள் போன்றவறையும் இருக்கின்றன. இதில் ஜியோ ஃப்ரீடம் திட்டங்களின் கீழ் ஒரேவொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கிடைக்கிறது. ரூ.355 விலைக்கு இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இதன் சலுகைகள் பட்டையை கிளப்புகின்றன.

Jio சிம் இருக்கா.. இனி ரூ.355-க்கு வருது.. 25GB டேட்டா.. வாய்ஸ் கால்!

ஜியோ ஃபிரீடம் திட்டம் ரூ 355 (Jio Freedom Plan Rs 355): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேல்யூ ரீசார்ஜ் போலவே லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. அதாவது, தினசரிக்கு டேட்டா கொடுக்கப்படாது. வேலிடிட்டி முழுவதும் மொத்தமாக டேட்டா கொடுக்கப்படும். இதை லிமிட் இல்லாமல் பயன்படுத்த முடியும். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இதற்கு பொருந்தும்.

இந்த ரூ 355 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 30 நாட்களுக்கும் சேர்த்து 25 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆனால், எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் முறையில் இருக்கவில்லை. தினசரிக்கு 100 என்ற கணக்கில் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதை போலவே இருக்கின்றன.

அதேபோல அன்லிமிடெ் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையின் கீழ் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) கொடுக்கிறது. ஜியோ கஸ்டமர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களின் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இந்த ஜியோ ஃபிரீடம் திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி சலுகை கிடையாது. ஆனால், 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த வேலிடிட்டிக்கு நல்ல சலுகைகளையே கொடுத்து இருக்கிறது. இந்த ஒரு திட்டம் மட்டுமே ஃபிரீடம் பட்டியலின் கீழ் கிடைக்கிறது. அதேபோல 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ஒரே திட்டமாக இது இருக்கிறது.

இதற்கு அடுத்து காலண்டர் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், தினசரி டேட்டாவுடன் கூடுதல் சலுகைகளை கிடைக்கின்றன. இதேபோல வேலிடிட்டியில் தினசரி டேட்டா வேண்டுமானால், இதைவிட மலிவான விலையில் ஒரு திட்டம் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 319 திட்டம் காலண்டர் வேலிடிட்டி (Jio Rs 319 Plan Calendar Validity): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை குறைவாகும். டேட்டா அதிகமாகவும் கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் தினசரி லிமிட் இல்லாததால் 25 ஜிபி மொத்தமாக கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் தினசரிக்கு 1.5 ஜிபி வீதம் காலண்டர் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, 45 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். ஆனால், ஒரு நாளுக்கு அதிகபட்சம் 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு குறைக்கப்படும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற ஆப்களின் சலுகை கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Freedom Plan For 2025 With Unlimited Voice Calls 25GB Data 30 Days Validity At Rs 355
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X