Home
News

ரூ.200 மதிப்புள்ள OTT சேவை இப்போ FREE.. 2 Jio திட்டங்களில் மட்டுமே ஸ்பெஷலாக கிடைக்கும் இலவச ஓடிடி ஆஃபர்!

Jio OTT Plans: முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் மட்டும்.. மிகவும் பிரபலமான ஓடிடி சந்தாவை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அது ரூ.199 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் சந்தாவாகும். இது 720பி எச்டி ரெசல்யூஷன் மற்றும் சிங்கிள் ஸ்க்ரீன் போன்றவைகளை வழங்குமொரு பேஸிக் பிளானாகும். இந்த இலவச நன்மையை வழங்கும் 2 ஜியோ திட்டங்களின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் வேறு என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன? இதேபோன்ற திட்டங்கள் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவிடம் உள்ளதா? இதோ விவரங்கள்:

ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் சேவையின் (Reliance Jio Prepaid Service) கீழ் 2 திட்டங்கள் மட்டுமே, நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானை (Netflix Basic Plan) இலவசமாக வழங்குகின்றன. முதல் திட்டம் - ரூ.1299 ரீசார்ஜ். இது இலவச நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானுடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் சேர்த்து டெய்லி 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது.

2 Jio திட்டங்களில் மட்டுமே ஸ்பெஷலாக கிடைக்கும் இலவச  ஓடிடி ஆஃபர்!

இரண்டாவது திட்டம் - ரூ.1799 ரீசார்ஜ். இது இலவச நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானுடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் (100 SMS Per Day), அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் (Unlimited 5G Data) சேர்த்து டெய்லி 3ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது.

மேற்கண்ட 2 திட்டங்களுமே தாராளமான டேட்டா நன்மையுடன் வருகின்றன. கூடவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் (Unlimited 5G Data Offer) வழங்குகிறது.இந்த சலுகையின் கீழ், ஜியோ 5ஜி சேவை (Jio 5G Service) அறிமுகம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களின் 5ஜி போன்களின் வழியாக.. ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அணுகவதற்காக வாய்ப்பு கிடைக்கும்.

ஜியோவை போலவே வோடாபோன் ஐடியா (Vodafone Idea - Vi) நிறுவனத்திடமும் கூட நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானை வழங்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் இவ்விரு திட்டங்களும் ஜியோவை விட மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. முதல் திட்டம் - ரூ.1,198 ரீசார்ஜ். இது இலவச நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானுடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், டெய்லி 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 70 நாட்களுக்கு வழங்குகிறது.

இரண்டாவது திட்டம் - ரூ.1,599 ரீசார்ஜ். இது இலவச நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானுடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், டெய்லி 2.5ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது. இருப்பினும் மேற்கண்ட 2 திட்டங்களுமே.. ஜியோ அளவிற்கு 5ஜி ஸ்பீட்டை வழங்காது. ஏனென்றால் வோடாபோன் ஐடியா இன்னும் அதன் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யவில்லை.

கடைசியாக உள்ள பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்திடம், நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானை இலவசமாக வழங்கும் ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின் விலை ரூ.1,798 ஆகும். இது இலவச நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானுடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் சேர்த்து டெய்லி 3ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது. அதாவது இது ரூ.1 மலிவான விலையில்.. ஜியோவின் ரூ.1.799 உடன் நேரடியாக போட்டி போடுகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Free OTT Offer Get Netflix Basic Plan Without Spending Money on Rs 1299 Rs 1799 Prepaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X