Home
News

Jio லைஃப்டைம் செட்டில்மென்ட்.. ரூ.349 க்கு ரூ.35,100 Google Gemini 3 சந்தா.. 18 மாதம் இலவசமாக பெறுவது எப்படி?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, இப்போது அதன் அனைத்து பயனர்களுக்கும் கூகுள் ஜெமினி ஏஐ சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இதுவரை இது 25 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ​​இது அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

மேலும், கூகுள் சமீபத்தில் ஜெமினி 3 (Gemini 3) என்கிற புதிய மாடலை அறிவித்தது, இது இன்று முதல் அனைவருக்கும் கிடைக்கும். இது இன்னும் 18 மாதங்களுக்கு பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த கூகுள் ஏஐ-க்கான 18 மாத சாந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Jio லைஃப்டைம் செட்டில்மென்ட்.. ரூ.349 க்கு ரூ.35,100 Google Gemini 3!

கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்:
- ஜியோவின் வரம்பற்ற 5ஜி (ரூ.349 முதல் தொடங்குகிறது) பயனர்களுக்கு மட்டுமே ஜெமினி ப்ரோ திட்டம் (ரூ.35,100 மதிப்பு) 18 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும்
- கூகுள் அதன் ஜெமினி ஏஐ-ஐ ஜெமினி 3 மாடலாக மேம்படுத்தியுள்ளது
- மைஜியோவில் உள்ள "கிளைம் நொவ்"பேனர் வழியாக இந்த இலவச சலுகையை உடனடியாக செயல்படுத்தலாம்
- இந்த சலுகை நவம்பர் 19, 2025 முதல் கிடைக்கும்

ரிலையன்ஸ் ஜியோ, கூகுள் உடனான அதன் ஏஐ கூட்டாண்மை மூலம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க விரும்புகிறது. இந்த சலுகையை பெற, பயனர்கள் மைஜியோ ஆப்பிற்கு சென்று, தங்கள் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்து, கூகுள் சலுகை பேனரை கிளிக் செய்தால் போதும். இது பயனரை நேரடியாக சலுகைக்கு அழைத்து சென்று, சலுகையைச் செயல்படுத்துவதற்கான அடுத்தடுத்த படிகளை தெரிவிக்கும்.

கூகுளின் மிகவும் திறமையான ஏஐ ஆனது ஜியோ திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதன் விளைவாக - ஜியோ பயனர்கள் ஜெமினி ஆப்பின் (Gemini App) மூலம் கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த ஏஐ அம்சங்களில் சிலவற்றை நேரடியாக பயன்படுத்தலாம். முன்னரே குறிப்பிட்டபடி, சிக்கலான பகுத்தறிவு, டெக்ஸ்ட் உருவாக்கம் மற்றும் ஆக்கப்பூர்வமான பணிப்பாய்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ மாடலின் மிகவும் திறமையான வெர்ஷன் ஆன ஜெமினி 2.5 ப்ரோவையும் சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும்.

சாட் மற்றும் ப்ரொடெக்டிவிட்டிக்கு அப்பால், உயர்தர இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கூகுளின் இரண்டு கிரியேட்டிவ் ஏஐ மாடல்கள் ஆன நானோ பனானா மற்றும் வியோ 3.1 ஆகியவற்றையும் கூட ஜியோ பயனர்கள் அணுகலாம். முன்னதாக கூகுள் சந்தாக்கள் மூலம் மட்டுமே கிடைத்த இந்த டூல்கள், இப்போது கூடுதல் கட்டணமின்றி ஜியோவின் 5ஜி திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இலவசமாக கிடைக்கும் கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தில் கூகுள் ஏஐ-பவர்டு நோட்-டேக்கிங் மற்றும் ரிசர்ச் கம்பானியன் ஆன நோட்புக்எல்-எம்-க்கான (NotebookLM) விரிவாக்கப்பட்ட அணுகலும் கிடைக்கும். இது பயனர்கள் ஸ்டடி மெட்டீரியல்களை ஒழுங்கமைக்கவும், ஆவணங்களை ஆட்டோமெட்டிக் ஆக சம்மரைஸ் செய்யவும் உதவும்.

முன்னரே குறிப்பிட்டபடி ரூ.35,100 மதிப்புள்ள இந்த திட்டத்தின் கீழ் ஏஐ டூல்களுடன், தகுதியான பயனர்கள் கூகுள் போட்டோஸ், ஜிமெயில் மற்றும் டிரைவ் முழுவதும் 2டிபி கிளவுட் ஸ்டோரேஜையும் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் சாட்களுக்கான பேக்கப் ஆதரவும் கிடைக்கும். இந்த சலுகை மைஜியோ (MyJio) ஆப் மூலம் கிடைக்கும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அதன் மிகவும் அட்வான்ஸ்டு ஏஐ டூல்களை (Advanced AI Tools) கிடைக்க செய்வதற்காக, கூகுள் நிறுவனமானது ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த புதிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாகவே, ஜியோ அன்லிமிடெட் 5ஜி பிளான்களை ரீசார்ஜ் செய்துள்ள கஸ்டமர்களுக்கு 18 மாதங்களுக்கான கூகுள் ஏஐ திட்டம் இலவசமாக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Free Google Gemini 3 Offer Now Available For All Jio Customers How to Claim
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X