மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா.. UPI.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜியோ..
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. தற்போது இந்நிறுவனம் ஜியோ ஃபனான்ஸ் செயலியை (Jio Finance App) அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கூகுள் பே, பேடிஎம் போன்பே போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோ நிறுவனமும் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஜியோ ஃபனான்ஸ் செயலியின் (Jio Finance App) பீட்டா வெர்ஷன் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோவின் இந்த புதிய செயலியில் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் வங்கி சேவைகள், மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான கடன் வசதிகள் மற்றும் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ ஃபனான்ஸ் செயலியின் முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது ஜியோ ஃபைனான்ஸ் செயலி மூலம் விரைவாக டிஜிட்டல் வங்கி கணக்கைத் திறக்க முடியும். பின்பு ஜியோ பேமெண்ட் வங்கி கணக்கு மூலம் வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும். அதேபோல் டிஜிட்டல் வங்கி சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், பில் செலுத்துதல், காப்பீட்டு ஆலோசனை போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புகளை ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளும் வசதியையும் இந்த புதிய ஜியோ செயலி வழங்குகிறது. வரும் காலங்களில் வீட்டு கடன்கள் போன்ற பல்வேறு கடன் திட்டங்களை வழங்க பைனான்சியல் சர்வீசஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இந்த ஜியோ ஃபனான்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து முக்கிய சேவைகளும் இந்த செயலியில் இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் உலகம் முழுவதும் பல நாடுகளில் கூகுள் பே சேவையை ஜூன் 4ம் தேதி முதல் நிறுத்தப் போகிறது கூகுள் நிறுவனம். அதன் பிறகு இந்த ஆப் மூலம் பணம் செலுத்த முடியாது. அதாவது கடந்த 2022-ம் ஆண்டு தான் கூகுள் வாலட் (Google Wallet) அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்பு கூகுள் பே பயனர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஆனாலும் கூகுள் பே செயலியை வரும் ஜூன் 4 -ம் தேதி முதல் நிறுத்த உள்ளது கூகுள் நிறுவனம்.

அதாவது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, அமெரிக்காவில் இருக்கும் மக்கள் கூகுள் பே மூலம் பணம் அனுப்பவோ, பணம் பெறவோ முடியாது என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 180 நாடுகளில் பயனர்கள் கூகுள் பே செயலிக்கு பதிலாக கூகுள் வாலட் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த கூகுள் வாலட். அதனால் பல்வேறு மக்கள் இதைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
எனவே கூகுள் நிறுவனம் அனைத்து அமெரிக்க பயனர்களையும் கூகுள் வாலட்டுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு கூகுள் பே செயலி இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








