ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் வேகம் குறைப்பு.!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோஃபைபர் புதுப்பிக்கப்பட்ட பிராட்பேண்ட் திட்டங்களின் வேகம் FUP வரம்பிற்குப் பிறகு 1 Mbps ஆகக் குறையும்
என்று தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ஜியோ ஃபைபர் ஆனது ரூ.399 முதல் ரூ.8,499 வரையிலான விலைகளில் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது. பின்பு புதிதாக குறைக்கப்பட்ட வேகம் ரூ.399 திட்டத்திற்கு பொருந்தும் என ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய திட்டத்தை துவங்கும்போது, இலவச குரல் மற்றும் வரம்பற்ற தரவு நன்மைகளை நிறுவனத்திற்கான உரிமைய நிறுவனம் கொண்டுள்ளது என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்நிறுவனம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, சுருக்கமாக இந்த திட்டத்தின் பலனைப் பெற நிறுவனங்களுக்கு உரிமை இல்லை.

அதாவது ஜியோ ஃபைபர் ரூ.399-திட்டம் ஆனது 30 Mbps வேகத்தில் வரம்பற்ற இணைய சேவையையும் (3300 GB தரவு) மற்றும் ஒரு மாதத்திற்கு வரம்பற்ற அழைப்பு வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டம் எந்த உள்ளடக்க நன்மையும் வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டம் வெண்கல திட்டம் (Bronze Plan) என்று அழைக்கப்படுகிறது. மற்ற ஆறு திட்டங்களுக்கு சில்வர்,கோல்டு, டயமண்ட், டயமண்ட் பிளஸ், பிளாட்டின், டைட்டானியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த திட்டங்கள் ரூ.699, ரூ.999, ரூ.1,499, ரூ.2499, ரூ.3999,ரூ.8499 ஆகிய விலைகளில் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த திட்டங்கள் வரம்பற்ற இணையம், இலவச குரல் அழைப்புகள் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகினறன. இதில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஒடிடி தளங்களுக்கான இலவச அனுகல் வழங்கப்படுகிறது.
இந்த ஒடிடி பயன்பாட்டில் ஜியோ சினிமா, ஜியோசாவ்ன், ஷீமரூமீ, சோனி லைவ், வூட், ஜீ 5இ ஆல்ட் பாலாஜி, லயன்ஸ் கேட், ஹோய்சோய், சன் நெக்ஸ்ட்,
அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்றவை அடங்கும்.

குறிப்பாக வளாக உபகரணஙகளை வழங்குவதாக அறிக்கை சிறப்பித்துள்ளது, அதாவது பயனர்கள் இடைப்பட்ட சிபிஇ-ஐ பெற பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.1500 செலுத்த வேண்டும். அதாவது இடைப்பட்ட சிபிஇ சாதனங்களில் சில வேறுபாடுகள் வரும்.


Click it and Unblock the Notifications