Home
News

கேபிள் டிவி, டிடிஎச் கதை முடிந்தது.. இறங்கிய அம்பானி.. Jio யூசர்களுக்கு இனி ஏறுமுகம்தான்.. டிவி சேனல்.. ஓடிடி!

கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சந்தாதாரர்களை ஒட்டுமொத்தமாக ஜியோவுக்கு மாற்றும்படியான திட்டத்தை முகேஷ் அம்பானி களமிறக்கி இருக்கிறார். 4K ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் மூலம் 800+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 14 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் அடிமட்ட விலைக்கு இறக்கி இருக்கிறார். இதுபோக 150 எம்பிபிஎஸ் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளையும் கொடுத்து கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்கும்படி செய்துள்ளது இந்த திட்டம். இந்த ஜியோ (Jio) திட்டம் குறித்த முழு விவரங்கள் இதோ.

ஜியோ ஃபைபர் (Jio Fiber) திட்டங்களில் மலிவான விலைக்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இதனால், ஓடிடிகளை பார்க்க வை-பை ரூட்டர் மூலம் டேட்டாவும், லைவ் டிவிகளை பார்க்க 4K ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸும் வழங்கப்படுகிறது.

கேபிள் டிவி, டிடிஎச் கதை முடிந்தது.. இறங்கிய அம்பானி.. Jio யூசர் குஷி!

இந்த ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் ஓடிடி ஆப்கள் மற்றும் டிவி சேனல்களுக்கான ஜியோ டிவி பிளஸ் (Jio TV Plus) ஆப்பும் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்படிருக்கும். மொபைல் நம்பர் மூலம் லாகின் செய்யதால் மட்டும் போதும் 14 ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்கள் எளிதாக பார்த்து கொள்ளலாம். இப்போது திட்டத்தின் விலை மற்றும் மற்ற சலுகைகளை பார்ப்போம்.

ஜியோ ஃபைபர் ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Fiber Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 150 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதற்காக வை-பை ரூட்டர் பெற்று கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையை லேண்ட்லைன் மூலம் பெற்று கொள்ள முடியும்.

ஆனால், லேண்ட்லைன் டிவைஸ்கள் கஸ்டமர்களிடம் ஏற்கனவே இருக்க வேண்டும். இதுபோக ஜியோ டிவி பிளஸ் ஆப் மூலம் 800+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த டிவி சேனல்களுக்காக 4K ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் கொடுக்கப்படும். ஆகவே, ஜியோ டிவி பிளஸ் ஆப்பை ஓப்பன் செய்துவிட்டு, ரிமோட் மூலம் நம்பர்களை டைப் செய்து சேனல்களை பார்க்கலாம்.

இந்த சலுகைகள் போக 14 ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஆல்ட்பாலாஜி (ALTBalaji) மற்றும் ஈராஸ்நவ் (Eros Now) சந்தா கிடைக்கிறது.

மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe), டாகுபே (DocuBay) எபிக்ஆன் (EPICON) மற்றும் ஜியோ டிவி பிளஸ் ஆப் மூலம் ஈடிவி வின் (ETV Win) ஆப்பின் சந்தாவும் வருகிறது. இதேபோல ரூ 1499 விலையில் மற்றொரு ஜியோ ஃபைபர் திட்டம் இருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.

அதேபோல கூடுதலாக ஃபேன்கேட் (FanCode) ஆப்பின் சந்தா கொடுக்கபடுகிறது. இந்த ஜியோ ஃபைபர் திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இருப்பினும், முதல் முறை திட்டத்தை பெறும்போது குறைந்தது 3 மாதங்களுக்கான தொகையை ஜிஎஸ்டி கட்டணத்துடன் சேர்த்து செலுத்தினால் மட்டுமே சேவைகள் வழங்கப்படும். எப்படி பார்த்தாலும், ஓடிடி டிவி சேனல்கள் மலிவாகவே கிடைக்கின்றன.

அதிலும், ஜியோ டிவி பிளஸ் ஆப் மூலமே லைவ் டிவி சேனல்கள் வருவதால், வரும் நாட்களில் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சந்தாதாரர்களுக்கு பெரும் போட்டியாக இது மாறும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஜியோ நிறுவனம் வெறும் ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் மட்டுமே டிவி சேனல்களுக்கான திட்டங்களை அறிமுகம் செய்தாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Fiber Rs 999 Plan With Free Voice Calls 800 TV Channels Unlimited Data 14 OTT Subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X