அம்பானிக்கு கும்பிடு.. 800+ டிவி சேனல்.. 12 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா.. ரூ.399 முதல் Jio Fiber திட்டம்!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் அறக்க பறக்கும்படி ஹை-ஸ்பீடு டேட்டா (High-speed Data), அன்லிமிடெட் வாய்ஸ் (Unlimited Voice) மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா (OTT Subscriptions) மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா (Live TV Channels Subscriptions) கம்மியான விலைக்கு கிடைக்கிறது. வெறும் ரூ.399 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. இந்த அக்டோபர் மாதத்தில் ஜியோ ஃபைபர் திட்டங்களை (Jio Fiber Plans) பெற திட்டமிட்டால், என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ஃபைபர் ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Fiber Rs 399 Plan Details): இந்த ஃபைபர் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும். 30 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்தி இந்த திட்டத்தை பெறலாம்.

ஜியோ ஃபைபர் ரூ 699 திட்ட விவரங்கள் (Jio Fiber Rs 699 Plan Details): இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். 30 நாட்கள் வேலிடிட்டியில் அதே வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தை திட்டத்தை போல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இதற்கும் மூன்று மாதங்களுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.
ஜியோ ஃபைபர் ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Fiber Rs 999 Plan Details): இந்த ஃபைபர் திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், கூடவே ஓடிடி ஆப்கள் மற்றும் டிவி சேனல்களின் சந்தா கிடைக்கிறது. ஆகவே, 150 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பெற முடியும். 800 டிவி சேனல்களின் சந்தா கிடைக்கிறது.
இந்த சந்தா போக 13 ஓடிடி ஆப்களின் சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். இந்த டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தாவுக்காக 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கிடைக்கிறது. ஓடிடி சந்தாவை பொறுத்தவரையில், அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv) மற்றும் ஜீ5 (ZEE5) ஆப்களின் சந்தா கிடைக்கிறது.
மேலும், ஜியோ நிறுவனத்தின் ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) கிடைக்கிறது. இதுபோக டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஈராஸ்நவ் (Eros Now), ஷீமாரூமீ (ShemarooMe), எபிக்ஆன் (EPICON), ஈடிவி வின் (ETV Win), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் டாகுபே (DocuBay) ஆகிய ஆப்களையும் பெறலாம்.
இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், குறைந்தது 3 மாதங்களுக்கான தொகையை (ரூ.2,997) முன்கூட்டியே செலுத்த வேண்டும். இதைவிட அதிக டேட்டா வேகம் வேண்டுமானால், 300 எம்பிபிஎஸ் வேகத்தில் மற்றொரு ஜியோ ஃபைபர் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் வாய்ஸ் கால்கள், டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா வாரி வழங்கப்பட்டுள்ளது.
ஜியோ ஃபைபர் ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio Fiber Rs 1499 Plan Details): இந்த ஃபைபர் திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். வாய்ஸ் கால்கள் சலுகையும் லிமிட் இல்லாமல் கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த 800+ டிவி சேனல்கள் சலுகை மற்றும் 12 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக பேன்கோட் (Fancode) கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








