ஜியோ ஃபைபர் புதிய டேட்டா வவுச்சர்: ரூ.101 முதல் 2000 ஜிபி வரை வழங்கும் திட்டங்கள்!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அடுத்தகட்ட திட்டமாக, முன்னோட்ட பயனர்களைக் கட்டண பயனர்களாக மாற்றுவதற்கான ஏற்பாட்டினை தொடங்கியுள்ளது. இந்த நோக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது புதிய டேட்டா வவுச்சர்கள் வழங்கவுள்ளது. இந்த புதிய டேட்டா வவுச்சர்களின் கீழ் பயனர்களுக்கு 2000 ஜிபி வரை டேட்டா பயன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள்

புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள்

புதிய டேட்டா வவுச்சர்கள், டேட்டா டாப்-அப்பை போல் செயல்படும். அதாவது, மாதாந்திர டேட்டா வரம்பு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தீர்ந்துவிட்டால், இந்த டேட்டா வவுச்சர்களை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் டேட்டா வவுச்சர்களை போல, இந்த புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள் ரூ.101 ரூபாயிலிருந்து ரூ.4001 வரை கிடைக்கிறது.

20ஜிபி டேட்டா முதல் 2000ஜிபி டேட்டா வரை

20ஜிபி டேட்டா முதல் 2000ஜிபி டேட்டா வரை

குறைந்த டேட்டா அளவாக 20ஜிபி டேட்டாவில் துவங்கி அதிகபட்ச டேட்டா அளவாக சுமார் 2000ஜிபி டேட்டா வரை இந்த புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்களின் கீழ் வழங்கப்படுகிறது. ஜியோபைபேர் கட்டண சந்தாதாரர்கள் தனது மை ஜியோ ஆப் மூலம் அல்லது இணையத்தளத்தில் உள்ள ஜியோபைபேர் அக்கௌன்டை லாகின் செய்து ரிச்சார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஃப்ரீ., ஃப்ரீ., ஃப்ரீ: செட்-டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கும் ஜியோ: வழிமுறைகள் இதோ?ஃப்ரீ., ஃப்ரீ., ஃப்ரீ: செட்-டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கும் ஜியோ: வழிமுறைகள் இதோ?

ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் விலை

ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் விலை

ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள் ஆறு விதமான கட்டணத்துடன், டேட்டா பயனை பயனர்களுக்கு வழங்குகிறது. புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள் ரூ.101, ரூ.251, ரூ.501, ரூ.1001, ரூ.2001 மற்றும் ரூ.4001 என்ற விலைகளில் கிடைக்கிறது. இந்த வவுச்சர்கள் மூலம் அதிகபட்சமாக 2000ஜிபி, அதாவது, 2டிபி வரை டேட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் கீழ் கிடைக்கும் திட்ட நன்மைகள்

ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் கீழ் கிடைக்கும் திட்ட நன்மைகள்

ரூ.101 ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் மூலம் பயனர்களுக்கு 20ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் ரூ.251 ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் மூலம் பயனர்களுக்கு 55ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் ரூ.501 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 125ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

டிராய் முடிவால் ஜியோ அதிர்ச்சி: ஏர்டெல், வோடோபோன் மகிழ்ச்சி!டிராய் முடிவால் ஜியோ அதிர்ச்சி: ஏர்டெல், வோடோபோன் மகிழ்ச்சி!

 2000ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை என்ன?

2000ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை என்ன?

ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் ரூ.1001 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு சுமார் 275ஜிபி வரையிலான டேட்டா சேவை வழங்கப்படுகிறது. ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் ரூ.2001 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 650ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகப்படியான டேட்டா வழங்கும் திட்டமாக ரூ.4001 வவுச்சர் திட்டம் உள்ளது, இதன் மூலம் பயணிகளுக்கு 2000ஜிபி வரையிலான டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

வேலிடிட்டி பற்றிய சந்தேகத்திற்கான பதில்

வேலிடிட்டி பற்றிய சந்தேகத்திற்கான பதில்

ஆனால் இந்த வவுச்சரின் கால அவகாசம் மாதாந்திர டேட்டா கால அவகாசத்துடன் முடிவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு உங்களுடைய 699 ரூபாய் ஜியோபைபேர் திட்டம் டிசம்பர் 24ஆம் தேதி முடிந்துவிடும் என்றால், நீங்கள் டாப் அப் செய்யும் ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் திட்டமும் நீங்கள் எந்த நாள் ரிச்சார்ஜ் செய்திருந்தாலும் டிசம்பர் 24ஆம் தேதியே முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கும் பயனுள்ள திட்டங்கள்.! 1,2,3,4.!வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கும் பயனுள்ள திட்டங்கள்.! 1,2,3,4.!

மீதம் உள்ள டேட்டாவை உங்களால் பயன்படுத்த முடியாது

மீதம் உள்ள டேட்டாவை உங்களால் பயன்படுத்த முடியாது

அதேபோல் ஸ்பெக்ட்ரா, யூ ப்ரோட் பேண்ட் மற்றும் ஏனைய ISPக்களை போல், உங்கள் டேட்டா வவுச்சரில் மீதம் உள்ள டேட்டாவை உங்களால் அடுத்த மாதத்திற்கு கேரி ஆன் செய்துகொள்ள இயலாது. அதாவது ஜியோபைபேர் வவுச்சரில் உள்ள உங்களுடைய மீதம் உள்ள டேட்டாவை உங்களலால் வேலிடிட்டி முடிந்த பின் அடுத்த மாதத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடியாது.

Best Mobiles in India

English summary
Jio Fiber New Data Voucher Plans Starts From Rs101 To The Highest Data Offering Plan Of 2000 GB : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X