ஜியோவை தொடர்ந்து இலவச எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ் வழங்கும் ஏர்டெல்: அதிரடி ஆரம்பம்.!

|

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் கூடுதலாக யாரும் எதிர்பார்த்திடாத அறிவிப்பையும் முகேஷ் அம்பானி வெளியிட்டார், அது 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்ஸை இலவசமாக வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட்பெய்ட் மொபைல் சந்தா, ஹோம் பிராட்பேண்ட்

போஸ்ட்பெய்ட் மொபைல் சந்தா, ஹோம் பிராட்பேண்ட்

இந்நிலையில் ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் ஒரு புதிய முயற்சியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் ஒருங்கினைந்த பில்லிங் திட்டத்தை சோதித்து வருகிறது. உண்மை என்னவென்றால், போஸ்ட்பெய்ட் மொபைல் சந்தா, ஹோம் பிராட்பேண்ட் மற்றும் டி.டி.எச் போன்ற ஒருங்கினைந்த சேவைகளுக்கான பில்லிங் திட்டத்தை ஆந்திரா மத்திய பிரதேசம் மற்றும் சண்டிகரில் சோதித்து வருகிறது.

  இலவசமாக வழங்கக்கூடும்...

இலவசமாக வழங்கக்கூடும்...

ஏர்டெல் நடத்தும் இந்த சோதனை திட்டத்துடன் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆண்ட்ராயட்டு அடிப்படையிலான ஸ்மார்ட் செட்டாப் பாக்ஸையும், அதன் பிரீமியம் திட்டங்களின் சந்தாதாரர்களுக்கு எச்டி எல்இடி டிவியையும் இலவசமாக வழங்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு!புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு!

 செப்டம்பர் 2019 முதல்..

செப்டம்பர் 2019 முதல்..

ஏர்டெல் நிறுவனத்தின் எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் செப்டம்பர் 2019 முதல் இந்தியா முழுவதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை அறிமுகம் செய்யும் போது, ஏரடெல் நிறுவனம் இந்த இலவச திட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸட்ரீமிங் சேவைகள் மற்றும் கேமிங்

ஸட்ரீமிங் சேவைகள் மற்றும் கேமிங்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஏர்டெல் ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் ஆனது எச்டி டிவி சேனல்கள் மற்றும் ஸட்ரீமிங் சேவைகள் மற்றும் கேமிங், இசை போன்ற பல்வேறு உள்ளடக்கத்தைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நிச்சயமாக வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்கும்

நிச்சயமாக வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்கும்

ஜியோ பிராட்பேண்ட் சேவை ஆனது மலிவு விலையில் கிடைக்கும் என்பதால், நிச்சயமாக வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்கும். இதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து ஜியோவிற்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 1000ஜிபி வரையிலா இலவச டேட்டா

1000ஜிபி வரையிலா இலவச டேட்டா

இதற்குமுன்பு ஏர்டெல் நிறுவனம் வி-ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் கிடைக்கும் மூன்று திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்தது, அதாவது 1000ஜிபி வரையிலா இலவச டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஃபைபர் கட்டண விபரம்

ஜியோ ஃபைபர் கட்டண விபரம்

ஜியோ ஃபைபர் செப்டம்பர் 5, 2019 முதல் இந்தியா முழுவதும் வணிக அடிப்படையில் தொடங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ ஃபைபர் பின்வரும் கட்டண விபரங்களுடன் பின்தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரைக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ செட்டப் பாக்ஸ்

ஜியோ செட்டப் பாக்ஸ்

இந்த புதிய சேவையின்படி ஜியோ பயனர்களை தியேட்டரில் வெளியாகும் புதிய திரைப்படங்களை முதல் நாள் முதலே அவர்களின் டிவியில் பார்த்துக்கொள்ளலாம். ஜியோ ஃபைபர் டிவியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ செட்டப் பாக்ஸ் உதவியுடன் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் துவங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Fiber Effect: Airtel Offers free Android Set-top-box and HD LED TV: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X