ஜியோவின் ரூ.199-திட்டம்: வரம்பற்ற டேட்டா: வரம்பற்ற குரல் அழைப்பு- வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மறுபடியும் புதிய புதிய திட்டங்களை வழங்க தொடங்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரூ.351 மற்றும் ரூ.199 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஜியோ அறிமுகம் செய்த இந்த திட்டங்களின் நன்மைகளை பார்ப்போம்.

 ரூ.199-திட்டம்

ரூ.199-திட்டம்

அதன்படி ஜியோஃபைபர் அதன் பயனர்களுக்கு புதிய ஆட்-ஆன் ப்ரீபெய்ட் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டதின்விலை ரூ.199 ஆகும். குறிப்பாக சொhல்லவேண்டும் என்றால் இந்த ரூ.199-திட்டம் வாராந்திர திட்டம் ஆகும். அதிக டவுன்லோட் செய்யும் பயனர்களுக்கு இந்த திட்டம் கண்டிப்பாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் ஏழு நாட்களுக்கு வழங்குகிறது

மொத்தம் ஏழு நாட்களுக்கு வழங்குகிறது

ஜியோ நிறுவனத்தின் இந்த ரூ.199- ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் ஆனது FTTX வீக்லி பிளான்-பிவி-199 என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் நன்மைகளை தவிர்த்து 100Mbps வேகத்திலான வரம்பற்ற டேட்டா அணுகலை மொத்தம் ஏழு நாட்களுக்கு வழங்குகிறது ஜியா நிறுவனம். மேலும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து பார்க்கும் போது இந்த ஜியோ ஃபைபர்திட்டத்தின் விலை ரூ.234.82 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா...ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது.!அடேங்கப்பா...ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது.!

காம்பளிமென்ட்ரி டிவி வீடியோ காலிங்

காம்பளிமென்ட்ரி டிவி வீடியோ காலிங்

இந்நிறுவனத்தின் புதிய வவுச்சர் பிளான் ஆனது தற்போதுள்ள ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.699 முதல் தொடங்கி ரூ.8,499 வலை நீளும் அனைத்து திட்டங்களுக்கும் அணுக கிடைக்கும். மேலும் இந்த புதிய ஃபைபர் ப்ரீபெய்ட்
பிளான் வவுச்சர் ஆனது வழக்கமான ஜயோ ஃபைபர் திட்டங்களைப் போலவே மற்ற சில நன்மைகளையும் வழங்குகிறது. அதன்படி வரம்பற்ற டேட்டா, அழைப்புகளும் சேர்த்து காம்பளிமென்ட்ரி டிவி வீடியோ காலிங் நன்மைகளையும் வழங்குகிறது.

 ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் பிளான்

ஆனால் புதிய ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் ஆனது இணக்கமான Customer Premise Equipment-ஐ கொண்ட வாடிக்கையாளர்களுக்கு" அணுக கிடைக்கிறது. பின்புCustomer Premise Equipment ஆனது இரண்டு வெவ்வேறு வகைகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்பு தொகை விருப்பங்களின்கீழ் அணுக கிடைக்கிறது: ரூ. 3,500 மற்றும் ரூ. 1,500.

 ரூ.351- ஃபைபர் திட்டம்

ரூ.351- ஃபைபர் திட்டம்

அதேபோல் ஜியோ நிறுவனத்தின் ரூ.351- ஃபைபர் திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை பயனர்களுக்கு மாதத்திற்கு 50ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டத்தின் இணைய வேகமானது 10எம்.பி.பி.எஸ் ஆகும். மேலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 50ஜிபி டேட்டா வரம்பு முடிந்ததும் இணைய வேகமானது 1எம்பிபிஎஸ் ஆக குறையும். பின்பு இந்த திட்டத்தில் சந்தாதாரர்கள் இலவச அழைப்பு
நன்மையையும் பெறுவார்கள்.

இது தவிர இந்த ரூ.351- ஃபைபர் திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு சில நன்மைகளும் உள்ளதுஇஅதாவது இந்த திட்டத்தில் காம்பிளிமென்ட்ரிடிவி வீடியோ காலிங் கிடைக்கும் என அறிவிப்பட்டுள்ளது. மேலும் சந்தாதாரர்கள் இந்த திட்டத்திற்கான 3மாதங்கள், 6மாதங்கள் அல்லது அரை வருடாந்திர சந்தா விருப்பத்தையும் தேர்வுசெய்ய முடியும், ஆனால் அதில் எந்த விதமான கூடுதல் நன்மையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Fiber Brings Rs. 199 Weekly Prepaid Plan Voucher With 100Mbps Speeds, Voice Calling Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X