Home
News

Jio-வா? இல்லை Airtel-லா? மோதி பார்த்தா யாரு பெஸ்ட்? ரூ.199 விலையில் அன்லிமிடெட் டேட்டாவா?

ஜியோ (Jio) நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஜியோ பைபர் பேக்அப் பிளான் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இப்போது, ஜியோவின் போட்டியாளரான ஏர்டெல் (Airtel), புதிதாக எக்ஸ்ட்ரீம் பைபர் ஸ்டாண்ட்பை பிளான் (Xstream Fiber Standby plan) திட்டத்தை அறிமுகம்-செய்துள்ளது.

ஜியோவைத் தவிர வேறு பிராட்பேண்ட் இணைப்பைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை பேக்அப் இணைப்பாக மாறும் நோக்கத்துடன், மிகவும் மலிவு விலையில் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ், ஜியோ ஃபைபர் பேக்அப் திட்டம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் தடையில்லா இன்டர்நெட் இணைப்பை உறுதி செய்கிறது. குறிப்பாக பல குடும்பங்கள் பாரம்பரிய DTH இணைப்பிற்கு பதிலாக JioCinema இல் IPL ஸ்ட்ரீமிங் செய்யஇந்த திட்டம் அனுமதிக்கிறது.

Jio-வா? இல்லை Airtel-லா? மோதி பார்த்தா யாரு பெஸ்ட்? அன்லிமிடெட் டேட்டா

இந்தத் திட்டம் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தரமிறக்க விரும்பும் தற்போதைய பயனர்களுக்கு இது கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோஃபைபர் பேக்கப் திட்டம் ரூ.198 விலையில் வருகிறது. இது 10mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா இணைப்பை வழங்குகிறது. இது ஒரு மாதாந்திர திட்டமாகும். இப்போது, ஏர்டெல் தனது சொந்த வகையிலான எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஸ்டாண்ட்பை ப்ளான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ.199 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு திட்டங்களும் ஒன்றுக்கொன்று எதிரானதாக இருந்தாலும், இரண்டு சலுகைகளிலும் சில வேறுபாடுகள் உள்ளன. இரண்டு திட்டங்களும் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதன் குறைந்தபட்ச சந்தா கால அளவு 5 மாதங்கள் மட்டுமே. ரூட்டர் இரண்டு திட்டங்களுடனும் இலவசம் என்றாலும் இன்ஸ்டால் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. வேகத்தைப் பொறுத்தவரை, இரண்டு திட்டங்களும் 10mbps உடன் வருகிறது.

ஆனால், ஜியோ ஃபைபர் பேக்கப் திட்டமானது 30mbps அல்லது 100mbps வேகத்தை மேம்படுத்த நெகிழ்வான 1/2/7 நாள் செல்லுபடியாகும் ஸ்பீட் பூஸ்டர் பேக்குகளை வழங்குகிறது. அதே சமயம், Xstream திட்டம் இப்படி எந்தவொரு ஸ்பீட் பூஸ்டரையும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இரண்டு திட்டங்களும் இலவச ஹைப்ரிட் செட்-டாப் பாக்ஸை வழங்குகிறது. JioFiber Backup திட்டம் 6 OTT ஆப்ஸ் மற்றும் 400 லைவ்-சேனல்களுக்கு கூடுதலாக ரூ.100 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது.

Jio-வா? இல்லை Airtel-லா? மோதி பார்த்தா யாரு பெஸ்ட்? அன்லிமிடெட் டேட்டா

அதேபோல், ஜியோ 14 OTT ஆப்ஸ் மற்றும் 550 லைவ் சேனல்கள் வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூ.200 என்று வசூலிக்கிறது. மறுபுறம், Xstream Fiber Standby திட்டம் 350+ லைவ் சேனல்களை வழங்குகிறது. இதில் OTT சந்தாக்கள் எதுவும் கிடைப்பதில்லை. DTH சேனல்களுக்கு மட்டும் கூடுதலாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டத்திற்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், ஜியோ சில OTT ஆப்ஸ்களின் நன்மையுடன் வருகிறது.

ஆனால், Airtel பாரம்பரிய DTH நெட்வொர்கை மட்டுமே வழங்குகிறது. ஜியோவின் பைபர் திட்டத்தை எந்தவொரு புதிய சந்தாதாரரும் உடனே முன்பதிவு செய்து சேவையை பெற துவங்கலாம். ஏர்டெல் பைபர் திட்டம் தற்போது Airtel நிர்வாகிகள் மூலம் மட்டுமே கிடைக்கிறது. ஏர்டெல்லின் நிலையான ரூ.499 திட்டம் மலிவு விலை சிக்கல்கள் காரணமாக. ரூ.399 ஸ்டாண்ட்பை திட்டம் ஏர்டெல் பிளாக் நன்மைகளுக்கு தகுதியற்றது என்று ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், வழக்கம் போல ஜியோ இறுதியில் அதிகப்படியான நன்மைகளை வழங்கி மக்களை கவர்ந்துள்ளது. ஆனால், கூடுதல் சேவைக்கு நீங்கள் அதிகமாக செலவிட வேண்டும் என்பதே உண்மையாகிறது. மறுபுறம் ஏர்டெல் நிறுவனம், பொதுவான ஸ்டாண்ட்பை திட்டத்திற்கு ஏற்ற நன்மைகளை தற்காலிக சேவைக்காக வழங்குகிறது. இறுதியில், எதை வாங்குவது என்பது உங்கள் ஏரியாவில் கிடைக்கும் நெட்வொர்க் சேவையை பொறுத்தது.

Best Mobiles in India

English summary
JioFiber Backup plan at Rs 198 vs Xstream Fiber Standby Plan at Rs 199 Which is Best Fiber Broadband Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X