Home
News

ஜியோவின் மெகா ட்ரீட்.. ஒரே பிளான் 4 சிம்களுக்கு டேட்டா, வாய்ஸ்.. 2 ஓடிடி சப்கிரிப்ஷன்.. ரூ.399 முதல் ஆரம்பம்!

ஜியோவின் ரூ.399 மற்றும் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக 3 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் கால், டேட்டா மட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் இதோ.

ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே கோடிக்கணக்கான மக்களுக்கு பரிட்சையமாக இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் போஸ்ட்பெய்ட் திட்டங்களை பற்றி அறிந்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் (Jio Postpaid Plans) கொடுக்கப்படும் சலுகைகளை பற்றி அறிந்தால், ப்ரீபெய்டை விட்டுவிட்டு போஸ்ட்பெய்டுக்கே மாறிவிடுவார்கள்.

ஜியோவின் மெகா ட்ரீட்.. ஒரே பிளான் 4 சிம்களுக்கு டேட்டா, வாய்ஸ்!

ஏனென்றால், அதில் அவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, போஸ்பெய்ட் திட்டங்களில் குடும்ப உறுப்பினர்களையும் இணைந்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை ஒரே ரீசார்ஜில் 4 சிம் கார்டுகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதிலும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்தால் சொல்லவா வேண்டும்.

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 399 Postpaid Plan Details): இந்த திட்டத்தில் ஒரு பிரைமரி சிம் கார்டு மற்றும் மூன்று கூடுதல் சிம் கார்டுகளை இணைந்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பின்பு, கூடுதலாக இணைக்கும் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ரூ.99 வசூலிக்கப்படும்.

அதாவது, முதலில் ரூ. 399 ரீசார்ஜ் செய்த பின்பு அதை பிரைமரி சிம் கார்டாக வைத்துக்கொண்டு அதனுடன் 3 சிம் கார்டுகளை இணைக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ரூ.99 வீதம் மொத்தம் ரூ.297 செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், 4 சிம் கார்களுக்கும் சேர்ந்து 30 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஆகிய ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், ஜியோ வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) பெயரில் கூடுதலாக 75 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தை 30 நாட்கள் ஃப்ரீ ட்ரையலாக பயன்படுத்திப் பின்பே பணம் செலுத்தினால் போதும்.

ஜியோ ரூ 699 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 699 Postpaid Plan Details): இந்த திட்டத்திலும் ஒரு பிரைமரி சிம் மற்றும் 3 கூடுதல் சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கிடைக்கும். முந்தைய திட்டத்தைப் போலவே கூடுதலாக ரூ.99 செலுத்தி சிம் கார்டுகளை இணைந்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 3 சிம் கார்டுகளை இணைக்கும் பட்சத்தில் 115 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கும். அதோடு, ஜியோ வெல்கம் ஆஃபராக 75 ஜிபி டேட்டா கிடைக்கும். நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) ஆகிய ஓடிடி தளங்களை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Family Postpaid Plans Rs 399 Rs 699 Comes With Unlimited Calling, Data Up To Three Additional SIM Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X