Home
News

Jio வழங்கும் 256 ஜிபி இலவச டேட்டா நன்மை செய்தி உண்மையா? பின்னணியில் புலப்பட்ட உண்மை இதுதான்!

ஜியோ மற்றும் பேஸ்புக் நிறுவனம் இரண்டும் சமீபத்தில் கைகோர்த்தது, இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதத்தில் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு நாட்டில் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது சுமார் 256 ஜிபி வரையிலான 4ஜி டேட்டா பயனை இலவசமாக வழங்குகின்றது என்று செய்திகள் பரவலாக பரவி வருகிறது. உண்மையில் ஜியோ அப்படி ஒரு சலுகையை வழங்கியுள்ளதா? இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்று கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட ஜியோ மற்றும் பேஸ்புக்

புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட ஜியோ மற்றும் பேஸ்புக்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன. இதன் காரணமாக வாட்ஸ்அப் உதவியுடன் சில்லறை துறையில் ஜியோ தனது ஜியோமார்ட் சேவையை இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜியோ மற்றும் பேஸ்புக் இருவரும் கூட்டுச்சேர்ந்து ஜியோ பயனர்களுக்கு ஊரடங்கின் போது 256 ஜிபி வரையிலான 4ஜி தரவை இலவசமாக வழங்குகிறது என்று செய்திகள் பரவி வருகிறது.

6 மாதங்களுக்கு 25 ஜிபி டேட்டா இலவசம்

6 மாதங்களுக்கு 25 ஜிபி டேட்டா இலவசம்

COVID-19 பாதுகாப்பிற்காக நடைமுறையில் உள்ள ஊரடங்கின் சிக்கலான நிலையை உணர்ந்து அனைத்து ஜியோ பயனர்களுக்கும் 6 மாதங்களுக்கு 25 ஜிபி தினசரி டேட்டா நன்மையை ஜியோ மற்றும் பேஸ்புக் இலவசமாக வழங்குகின்றது. இந்த இலவச 256 ஜிபி டேட்டா நன்மையைப் பெற உடனே இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள் என்ற மெசேஜ் உடன் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெசேஜ் பரவலாகப் பரவி வருகிறது.

சலுகையில் எதோ வில்லங்கம் இருக்கிறதே?

சலுகையில் எதோ வில்லங்கம் இருக்கிறதே?

இந்த சலுகையைப் பார்த்ததும் இதில் எதோ வில்லங்கம் இருக்கிறது என்று உணர்ந்து, இதைத் தீவிரமாக விசாரித்த போது, ஜியோ உண்மையில் இப்படி எந்தவொரு இலவச சலுகையையும் தற்பொழுது தனது பயனர்களுக்காக வழங்கவில்லை என்பது உறுதியானது. இது தவிர, மெசேஜ் இல் உள்ள இணைப்பு பயனர்களை வீபிலியின் இலவச பதிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அங்கீகரிக்கப்படாத வலைத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

மைஜியோ ஆப்பிற்கான குளோன்

மைஜியோ ஆப்பிற்கான குளோன்

இந்த சலுகையைப் பெற ஆசைப்பட்டு ஒருவேளை நீங்கள் அந்த இணைப்பு லிங்கை கிளிக் செய்தால், பிரைம்-ஆஃபர் என்ற பெயரில் செல்லும் பயன்பாடு பாக்ஸ்.காம் சேவையகம் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்படும். இந்த பயன்பாடு மைஜியோ ஆப்பிற்கான குளோனாக செயல்படுகிறது.

பயனர்களுக்கு ஆபத்து

பயனர்களுக்கு ஆபத்து

அங்கீகரிக்கப்படாத பயன்பாடு என்பதனால் இது பாதுகாப்பற்றது, பயனரின் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் தரவு மீறல் போன்ற செயல்களால் பயனர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், மக்கள் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

அதேபோல், நம்பகத்தன்மை இல்லாத நபர் மற்றும் உங்களுக்குத் தெரியாத எண்களிலிருந்து வரும் மெசேஜ் இல் உள்ள செய்தியில் இதுபோன்ற ஏதேனும் லிங்கை நீங்கள் கண்டால், அதை உடனே தவிர்த்துவிடுங்கள். அதேபோல், இந்த செய்தியைத் தெரியாத மற்றவர்களுக்கும் முடிந்த வரை பகிர்ந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Fake News Alert About Free 25GB Daily Data For 6 Months Pack : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X