திடீரென பல பகுதிகளில் முடங்கியது Jio.. வாய்ஸ் கால்கள், மெசேஜ், நெட் பயன்படுத்த முடியவில்லை..
இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களை விட அதிக பயனர்களைக் கொண்டுள்ளது ஜியோ (Jio) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஜியோவின் சேவை பல இடங்களில் முடங்கியுள்ளது (Jio faces network outage). இதனால் பயனர்கள் கால் பேசுவது, நெட் பயன்படுத்துவது போன்ற அடிப்படை சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அதாவது தற்போது நாட்டில் பல பகுதிகளில் ஜியோ தளம் முடங்கியுள்ளது. அதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மும்பை பகுதிகளில் ஜியோ சேவை பெரியளவில் முடங்கியுள்ளது. இதுதவிர பல்வேறு வட்டங்களிலும் ஜியோ சேவை முடங்கியுள்ளது. இதனால் நெட் சேவையை யூஸ் செய்வது, கால் பேசுவது உள்ளிட்ட சேவைகளைக் கூட பயன்படுத்த முடியவில்லை.

ஆனால் இந்த விவகாரம் குறித்து தற்போது ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நெட்டிசன்கள் பலரும் தங்களால் எந்தவொரு சேவையையும் பயன்படுத்த முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இது குறித்து டவுன் டிடெக்டரின் எனும் டெக் நிறுவனம் கூறுகையில், மும்பை மற்றும் பிற வட்டங்களில் ஜியோ செயலிழப்பு காணப்படுகிறது. ஜியோ செயலி கூட வேலை செய்யவில்லை எனவும், மும்பை முழுவதும் ஜியோ மொபைல் சேவை முடங்கியுள்ளது எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய செயலிழப்பாக இது உள்ளது என்று கூறுகிறார்கள். மேலும் ஜியோ வழங்கும் இரண்டு வருடாந்திர திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க.
அதேபோல்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3599 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதேசமயம் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என நிறுவனம் கூறியுள்ளது.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 3999 Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். இதுதவிர ஃஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகளை இந்த திட்டத்தில் பெறமுடியும்.
குறிப்பாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.


Click it and Unblock the Notifications