Home
News

ஜியோ வழங்கும் EXTRA DATA சலுகை.. எந்தெந்த திட்டங்களில் தெரியுமா? இதோ முழு விவரம்..

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா மற்றும் எக்கச்சக்க நன்மைகளை வழங்குகிறது ஜியோ நிறுவனம். எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா அதாவது கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி உள்ளது. அந்த எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கும் ஜியோ திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 219 Recharge Plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். அதேபோல் திட்டத்தில் எக்ஸ்ட்ரா 2ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே இந்த ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ வழங்கும் EXTRA DATA சலுகை.. எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (Jio RS 398 Plan) 13 ஒடிடி சேவைகளுக்கான சந்தாவை வழங்குகிறது. அதன்படி சோனி லிவ், ZEE5, லியாங்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன் என்எக்ஸ்டி, Kanchha Lannka, பிளானட் மராத்தி, சௌபால், Hoichoi, டாக்குபே, எபிக் ஆன், ஜியோடிவி ஆப் உள்ளிட்ட ஆப்ஸ்களுக்கான சந்தா வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல் ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இதில் வழங்கப்படுகிறது. எனவே இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ வழங்கும் EXTRA DATA சலுகை.. எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 399 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் (extra free data) கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 90ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். மேலும் இந்த ஜியோ திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாகிடைக்கும். எனவே இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 200ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி,ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 1198 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 18ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 186ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதுதவிர ஒடிடி நன்மைகளும் இதில் வழங்கப்படுகிறது.

ஜியோ வழங்கும் EXTRA DATA சலுகை.. எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) , கன்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சவ்பால் (Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi), ஜியோ டிவி (JioTV) ஆகிய தளங்களின் சந்தா ஜியோ ரூ.1198 திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 4498 Recharge Plan) சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் போன்ற 15 ஒடிடி சந்தா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 78ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio EXTRA DATA Offer: Know Which Prepaid Plans? Here is the full details: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X