7100 கோடி லாபம்.. மறுபடியும் கஸ்டமர்களுக்கே அள்ளி கொடுத்த அம்பானி.. 2 Jio அன்லிமிடெட் ஆபர்கள் நீட்டிப்பு!
2025 ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் கிடைத்த பலத்த வரவேற்பை தொடர்ந்து, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த 2 வகையான அன்லிமிடெட் சலுகையை (Unlimited Offer) நீட்டித்து உள்ளது.
ஒன்று - ரூ.299 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 90 நாட்கள் வரையிலாக கிடைக்கும் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு - ரூ.500 திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையுடன் ஜியோஃபைபர் அல்லது ஏர்ஃபைபரின் 50 நாள் இலவச சோதனை சலுகையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஆனது வலுவான நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் நிகர லாபம் 24.8% அதிகரித்து ரூ.7,110 கோடியாக உள்ளது. மொபிலிட்டி பிரிவில் ஏற்பட்ட லாபங்கள் மற்றும் ஹாம் பிராட்பேண்ட் இணைப்புகளில் சேர்ந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையால் - இது சாத்தியமாகி உள்ளது இதனொரு பகுதியாகவே அன்லிமிடெட் சலுகைகள் நீடிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பொறுத்தவரை தகுதியுள்ள அனைத்து ஜியோ ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு பயனர்களும் "ஜியோ ஹோம் அன்லிமிடெட் ஆஃபர் 2025" என்கிற சலுகையின் கீழ் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெறுவார்கள்.
யாரெல்லாம் இந்த சலுகையை பெறலாம்? நீங்கள் ஒரு ப்ரீபெய்டு பயனராக இருந்தால் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 ஜிபி டேட்டாவை உள்ளடக்கிய திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். போஸ்ட்பெய்டு பயனராக (புதிய வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் திட்டத்தை மாற்றுபவர்கள் உட்பட) இருந்தால் மாதத்திற்கு ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மேலும் உங்களுடைய ரீசார்ஜ் 28 - 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றால் உங்களுக்கு 1 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். உங்களுடைய ரீசார்ஜ் 28 - 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றால் உங்களுக்கு 2 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். ஒருவேளை உங்களுடைய ரீசார்ஜ் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றால் உங்களுக்கு 3 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.
யாரெல்லாம் இந்த சலுகைக்கு தகுதியற்றவர்கள்? ஜியோபாரத், ஜியோபோன் அல்லது வாய்ஸ் ஒன்லி வேல்யூ திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. பிற முக்கிய நிபந்தனைகளை பொறுத்தவரை, இந்த சலுகையை பெற, பயனர்கள் ஆக்டிவ் ஆக உள்ள ஜியோ ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களாக இருக்க வேண்டும் மற்றும் ஜியோ ப்ரைம் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த சலுகை கிடைக்கும் இறுதி தேதி ஜியோவால் தீர்மானிக்கப்படும்.
ஜியோ ஹோம் வைஃபை சலுகையை பொறுத்தவரை, 50 நாள் இலவச ஹோம் இண்டர்நெட் சோதனையை நீங்கள் முயற்சி செய்யலாம். இதன்கீழ் தகுதியுள்ள ஜியோ ப்ரீபெய்ட்/போஸ்ட்பெய்ட் பயனர்கள் 50 நாட்களுக்கு ஜியோஃபைபர் அல்லது ஜியோஏர்ஃபைபரின் இலவச சோதனையை பெறுவார்கள்
புதிய பயனர்கள் ரூ.349 உடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள பயனர்கள் ரூ.349+ திட்டங்களுடன் 1.5 ஜிபி/நாள் அல்லது அதற்கு மேலான திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ.100 டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜும் இந்த சலுகைக்கு தகுதி பெறுகிறது.
ரூ.500 திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை, 6 மாதங்களுக்கு பிறகு ஐந்து ரூ.100 வவுச்சர்களாக திருப்பித் தரப்படுகிறது. இதை ஒரு நேரத்தில் ஒரு வவுச்சரை மட்டுமே ரீடீம் செய்ய முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 50 நாட்களுக்கு பிறகு, பயனர்கள் ரூ.599 ஜியோஃபைபர் / ஜியோஏர்ஃபைபர் போஸ்ட்பெய்டு திட்டத்திற்கு தானாக மாற்றப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications








