மொத்தமா இறக்கியாச்சு.. ஜியோஹாட்ஸ்டார் To சோனிலிவ்.. ரூ.100 முதல் ரூ.1799 வரை.. ஓடிடி திட்டங்களின் லிஸ்ட்!
ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஓடிடி திட்டங்களின் (OTT Plan) முழு லிஸ்ட்டை இங்கே கொடுத்துள்ளோம். இதில் ஜியோஹாட்ஸ்டார், ஜியோடிவி பிரீமியம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5, சோனிலிவ் போன்ற ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1799 வரையில் திட்டங்கள் வருகின்றன. இதில் உங்களுக்கு பிடித்த ஓடிடியுடன் என்னென்ன திட்டங்கள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோடிவி பிரீமியம் திட்டங்கள் (JioTV PREMIUM Plans): இந்த ஓடிடி சந்தாவுடன் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களில் ஓடிடி பண்டில் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, ஜியோடிவி பிரீமியம் சந்தாவுடன் 10 ஓடிடிகளின் சந்தாவை பெற்று கொள்ள முடிகிறது. முதலாவது திட்டம் ரூ.175-க்கு கிடைக்கிறது. இதில் டேட்டா மற்றும் ஓடிடி சந்தா மட்டுமே கிடைக்கிறது.

ஆகவே, சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட்ஸ் பிளே, டிஸ்கவரி பிளஸ்), சன் நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி, சாவ்பால் ஆகிய ஓடிடி ஆப்கள் மற்றும் 10 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த ஓடிடி மற்றும் டேட்டாவுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு அடுத்து ரூ.445 விலைக்கு ஜியோடிவி பிரீமியம் திட்டம் கிடைக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு பேன்கோட், ஜியோ கிளவுட், சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட்ஸ் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி மற்றும் சாவ்பால் ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய சலுகை 28 நாட்களுக்கு கிடைக்கிறது.

நெட்பிளிக்ஸ் திட்டங்கள் (Netflix Plans): நெட்பிளிக்ஸ் ஓடிடி சந்தா கொண்ட திட்டம் ரூ.1299 முதல் தொடங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா கிடைக்கிறது. இதே 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (2GB Data) மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி கால்கள் (STD Calls) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கின்றன. ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இதற்கு அடுத்து ரூ.1799 விலைக்கு நெட்பிளிக்ஸ் சந்தா கொண்ட திட்டம் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா 84 நாட்களுக்கு கிடைக்கிறது.
இதேபோக நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோஏஐ கிளவுட் சந்தா மற்றும் ஜியோ டிவி சந்தாவும் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா திட்டத்தில் அதிக விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது.

அமேசான் பிரைம் லைட் திட்டங்கள் (Amazon Prime Lite Plans): ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் அமேசான் பிரைம் லைட் சந்தாவுடன் ஒரேவொரு திட்டம் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டம் ரூ.1029 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு 84 நாட்களுக்கான பிரைம் வீடியோ சந்தா மட்டுமல்லாமல் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி சலுகைகயும் வருகிறது.
டேட்டாவை பார்க்கையில் நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாதபட்சத்தில்) கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ ஏஐ கிளவுட் டேட்டா, ஜியோ டிவி சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

ஜியோஹாட்ஸ்டார் திட்டங்கள் (JioHotstar Plans): ரூ.100 விலையில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆகவே, 5 ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இந்த திட்டம் வருகிறது. இதற்கு அடுத்து 15 ஜிபி டேட்டாவுடன் 90 நாட்களுக்கான ஜியோஹாஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் விலை ரூ.195ஆக இருக்கிறது. இறுதியாக ரூ.949 விலை கொண்ட ஜியோஹாட்ஸ்டார் சந்தா திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது.
ஃபேன்கோட் திட்டங்கள் (FanCode Plans): இந்த ஓடிடி சந்தா மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.3999 விலைக்கு கிடைக்கிறது. இவ்வளவு அதிக விலைக்கு கிடைப்பதால், மற்ற சலுகைகளும் அதிமாகவே இருக்கின்றன. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இதில் பெற்று கொள்ளலாம்.

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த சலுகைகளுடன் ஒரு வருட சந்தா கொடுக்கும்படி ஃபேன்கோட் சந்தா கிடைக்கிறது. வருடாந்திர வேலிடிட்டியில் ஓடிடி திட்டம் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டம் சரியான தேர்வாக இருக்கும்.
ஜீ5, சோனிலிவ் திட்டங்கள் (ZEE5 SonyLIV Plans): ஜியோவில் கிடைக்கும் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜீ5 மற்றும் சோனிலிவ் ஓடிடி ஆப்கள் காம்போ சலுகையில் கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் கிடைக்கிறது.
ஜியோசாவன் ப்ரோ திட்டங்கள் (JioSaavn Pro Plans): இது ஓடிடி சந்தா கிடையாது. இருப்பினும், ஜியோவின் எண்டர்டெயின்மெண்ட் திட்டங்களின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, இதில் 84 நாட்கள் சந்தாவில் ஜியோசாவன் சந்தா மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவும் இதில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications