Home
News

இதுதாங்க ரீசார்ஜ்.. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம்.. பிரீமியம் ஓடிடி சந்தா.. ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஜியோ கஸ்டமர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) மற்றும் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கும் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவில் இருந்து ஆரம்ப விலையில் ரூ.949 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதுவொரு மொபைல் சந்தாவாகும். 90 நாட்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

இதுதாங்க ரீசார்ஜ்.. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் சந்தா!

இந்த நாட்களில் ஹாட்ஸ்டார் சந்தாவுக்கு அடுத்தப்படியாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டா போக தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்யலாம்.

ஜியோ ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1029 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா, ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆகிய ஆப்களின் சந்தா கிடைக்கிறது. அமேசான் சந்தாவை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல திட்டத்துக்கும் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்ப்போம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ் வழக்கம்போல வருகின்றன. அடுத்து நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்களை பார்க்கப்போகிறோம். இதில் 2 திட்டங்கள் இருக்கின்றன.

ஜியோ ரூ 1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி சந்தா கிடைக்கும். இது மொபைல் சலுகையை கொடுக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே ஜியோ டிவி, ஜியோ சினிமா சலுகைகளும் வருகின்றன. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.

மற்ற சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இதற்கு அடுத்து ஒரு நெட்பிளிக்ஸ் திட்டம் இருக்கிறது. ஆனால், அதிலும் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி இருக்கிறது. இருப்பினும், டேட்டா கூடுதலாக கிடைக்கிறது.

ஜியோ ரூ 1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 Prepaid Plan): முந்தைய திட்டத்தை போலவே நெட்பிளிக்ஸ் சந்தா கிடைக்கிறது. ஆனால், இது பேசிக் சலுகையை கிடைக்கிறது. அதேபோல தினசரிக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. இதுபோக ஜியோ ஓடிடி ஆப்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Entertainment Plans With Amazon Prime Netflix Disney Plus Hotstar Start At Rs 949 Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X