ஜியோவை அப்படியே காப்பியடித்து புதிய ரூ.399/- ஏர்டெல் திட்டம் அறிமுகம்.!
ஏர்டெல் தற்போது ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி என அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
தற்போது தொலைதொடர்புத்துறைகள் பொறுத்தவரை தினம்தினம் புதிய அதிரடி ஆபர்களை அறிவித்து வந்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் ஜியோ நிறவனம் புதியக் கட்டணச்சலுகைகளை அறிவித்தது மேலும் 4ஜி பீச்சர்போன்களை அறிமுகப்படுத்தியது. அதன்பின் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல டேட்டா ஆபர்களை அறிவித்தவ வண்ணம் உள்ளது.
இப்போது ஜியோவுக்கு எதிராக புதிய டேட்டா ஆபரை அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டம் 4ஜிபயனர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.399-க்கு ரீசார்ஜ்:
ஏர்டெல் தற்போது ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி என அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

4ஜி பயனர்கள்:
இந்த திட்டம் பொறுத்தவரை 4ஜி பயனர்களுக்கு மட்டுமே கடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தினசரி1ஜிபி டேட்டா வீதம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்புகள்:
ரூ.399-க்கு ரீசார்ஜ் திட்டம் மூலம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியுர் அழைப்புகளை பெறமுடியும் என ஏர்டெல்நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் பிராட்பேண்ட் :
ஏர்டெல் பிராட்பேண்ட் வழங்கும் ரூ.599 ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199, அதன்பின் ரூ.1599 விலையில் புதிய திட்டங்களில்1000ஜிபி கூடுதல் டேட்டாவழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

வலைதளம்:
ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இந்த பிக்பைட் திட்டத்தைப் பெற www.airtel.in/broadband என்றவலைதளம் மூலம் செல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications