நவ.3 கடைசி.. 1 வருடத்துக்கு இலவசம்.. தீபாவளி ஆஃபருக்கு Jio யூசர்கள் இதை பண்ணிடுங்க.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனத்தின் ஒரு வருட இலவச ஏர்ஃபைபர் திட்டத்தை (One Year Free AirFiber Plan) பெறுவதற்கு நவம்பர் 3ஆம் தேதி கடைசியா நாளாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிடைத்த இந்த சலுகை இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால், கஸ்டமர்கள் அறக்க பறக்க பெற்று வருகின்றனர்.
இந்த ஜியோ தீபாவளி சலுகையில் (Jio Diwali Offer) ஒரு வருடத்துக்கான ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் கிடைக்கிறது. இந்த ஏர்பஃபைபர் திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த சலுகை மொத்தமாக கிடைக்காது. 12 மாதங்கள் வீதம் 12 கூப்பன்களாக கொடுக்கப்படும். இதை மாதத்துக்கு மாதம் கிளைம் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகையை எப்படி பெறுவது? ஒரு வருடத்துக்கு இலவசமாக கிடைப்பதால், இந்த சலுகையின் மதிப்பு ரூ.7000-க்கும் மேல் இருக்கிறது. ஏனென்றால், இந்த ஜியோ ஏஃபைபர் திட்டத்தி வை-பை ரூட்டர் மற்றும் டிவி சேனல்களுக்காக 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கிடைக்கிறது. ஆகவே, இலவசமாக பெறுவதற்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் (Reliance Digital Store) ஷாப்பிங் செய்ய வேண்டும்.
அதாவது, நவம்பர் 3ஆம் தேதிக்குள் ரூ.20000 மதிப்பிலான ஷாப்பிங் அல்லது அதற்கு மேலாக விலைக்கு ஷாப்பிங் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த ஏர்ஃபைபர் திட்டத்துக்கான கூப்பன்கள் கொடுக்கப்படும். ஆகவே, 12 கூப்பன்களை இந்த ஷாப்பிங் மூலம் பெற்று கொள்ளலாம். இந்த கூப்பன்களை கிளைம் செய்ய வேண்டுமானால், மீண்டும் ஷாப்பிங் செய்ய வேண்டும்.
முதலில் கூப்பன்களை பெற்றுவிட்டு, அதன்பிறகு அதை ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), மை ஜியோ ஸ்டோர் (My Jio Store) மற்றும் ஜியோமார்ட் டிஜிட்டல் (JioMart Digital) போன்ற ஸ்டோர்களில் ரூ.15,000-க்கும் ஷாப்பிங் செய்யும்பட்சத்தில் ஏர்ஃபைபர் கூப்பன்கள் கிளைம் செய்யப்பட்டு, உங்களது ஜியோ நம்பருக்கு புக்கிங் செய்யப்பட்டுவிடும். இப்படி 12 கூப்பன்களை கிளைம் செய்யலாம்.
ஆகவே, நவம்பர் 3ஆம் தேதிக்குள் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் ஷாப்பிங் செய்து 1 வருடத்துக்கான ஜியோ ஏர்ஃபைபர் கூப்பன்களை பெற்று கொள்ளுங்கள். இந்த கூப்பனில் ரூ.599 மதிப்பிலான ஏர்ஃபைபர் திட்டமே கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த ஜியோ ரூ.599 ஏர்ஃபைபர் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் வை-பை டேட்டா, லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்கள் சலுகை கிடைக்கும். ஆகவே, வை-பை ரூட்டர் மூலம் 30 எம்பிபிஎஸ் டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மாதத்துக்கு 1 டிபி டேட்டாவை அதிகபட்சமாக பயன்படுத்த கிடைக்கும். லேண்ட்லைன் கால்களை செய்து கொள்ளலாம்.
இந்த அதிகப்படியான டேட்டாவுக்கு ஏற்ப 14 ஓடிடி சந்தா (OTT Apps Subscription) கிடைக்கிறது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), சோனிலிவ் (Sony Liv), சன்நெக்ஸ்ட் (Sun NXT), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஈராஸ்நவ் (Eros Now) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட ஆப்கள் கிடைக்கின்றன.
இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் வை-பை ரூட்டர் மூலம் டேட்டா கிடைப்பது போல, ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் மூலம் 800-க்கும் மேற்ப டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் ரூ.599 மதிப்பிலான திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டமே 12 கூப்பன்களான தீபாவளி ஆஃபார கஸ்டமர்களுக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications