Home
News

மறுபடியும் 1 வருடம் இலவசம்.. நவ.3 முடிந்தது.. தீபாவளிக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. வை-பை டேட்டா.. 800 டிவி சேனல்!

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் கஸ்டமர்களை குளிர்விக்கும்படி தீபாவளி ஆஃபரை களமிறக்கி இருக்கிறது. பழையபடி ஒரு வருடத்துக்கான திட்டத்தை இலவசமாக கொடுக்கிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மட்டுமல்லாமல், 800 டிவி சேனல்கள், 13 ஓடிடி ஆப்கள் போன்ற சலுகைகளும் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த சலுகைகளை பெற்று கொள்ளவதற்கான கடைசி தேதி நவம்பர் 3ஆம் தேதியாக இருக்கிறது. இந்த ஜியோ தீபாவளி சலுகையை 2024 (Jio Diwali Offer 2024) எப்படி பெறுவது?

இலவச சலுகைகளை கொடுப்பதில் ஜியோ நிறுவனத்தை அடித்து கொள்ள முடியாது. இப்போது, பழையபடி இலவச திட்டங்களை கொடுக்க தொடங்கி இருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு 2 சலுகைகள் கிடைக்கின்றன. ஒரு வருடத்துக்கான இலவச ஏஃர்பைபர் சந்தா மற்றும் ரூ.2222 மதிப்புள்ள திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள், 800 டிவி சேனல்கள், 13 ஓடிடி ஆப்கள் சலுகை கொடுக்கிறது.

மறுபடியும் 1 வருடம் இலவசம்.. நவ.3 முடிந்தது.. தீபாவளிக்கு அன்லிமிடெட்!

ஒரு வருட இலவச சலுகையை பற்றி முதலில் பார்த்து விடுவோம். இதுவொரு குறுகிய கால சலுகையாகும். வரும் நவம்பர் 3ஆம் தேதிக்குள் மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதாவது, தீபாவவளியை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் (Reliance Digital store) ரூ.20000 அல்லது அதற்கு மேல் பொருட்களை வாங்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஒரு வருட இலவச ஏர்ஃபைர் (1 Year Free AirAirFiber) சலுகை கிடைக்கிறது.

இந்த சலுகை 12 கூப்பன்களாக கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் வருடம் முழுவதும் ஏஃர்பைபர் சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு கூப்பனையும் சலுகையாக மாற்ற வேண்டுமானால், ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), மை ஜியோ ஸ்டோர் (My Jio Store), ஜியோமார்ட் டிஜிட்டல் (JioMart Digital) உள்ளிட்ட ஸ்டோர்கள் ரூ.15,000 பொருட்களை வாங்க வேண்டும்.

இப்படி மாதம் மாதம் பொருட்களை வாங்கி கூப்பன்களை சலுகையாக மாற்றலாம். இந்த சலுகை வேண்டாம் என்றால், ஜியோ கஸ்டமர்கள் ரூ.2222 மதிப்பிலான ஏர்ஃபைபர் சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த திட்டமானது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேகமாக கொடுக்கப்படுகிறது. முதலில் இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளவோம். இது மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது.

இந்த திட்டத்தை பெறும்போது வை-பை ரூட்டர், 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படும். ரூட்டர் மூலம் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் வை-பை டேட்டாவை பெற்று கொள்ளலாம். மாதத்துக்கு 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வை-பை மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimted Voice Calls) பயன்படுத்தி கொள்ள முடியும். 800+ லைவ் டிவி சேனல்கள் சலுகை கிடைக்கிறது.

இந்த சேனல்கள் மட்டுமல்லாமல், 13 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. ஓடிடி ஆப்களை பார்க்கையில், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv) மற்றும் ஜீ5 (ZEE5) போன்ற முன்னணி ஆப்கள் கிடைக்கின்றன. இதுபோக ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), சன்நெக்ஸ்ட் (Sun NXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), ஹோய்சோய் (Hoichoi) வருகிறது.

மேலும், ஷீமாரூமீ (ShemarooMe), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now) மற்றும் ஈடிவி வின் (ETV Win) மற்றும் ஜியோடிவிபிளஸ் (JioTv+) ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 சலுகைகள் மட்டுமே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. முதலாவது சலுகை செலவு அதிகமாக இருக்கலாம். ஆனால், 2ஆவது சலுகை முற்றிலும் லாபம் தரக்கூடிய சலுகையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Diwali Offer 2024 Customers Gets 1 Year Free AirFiber Plan Last Date November 3 How To Get
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X