அம்பானியா கொக்கா.. 2 Jio திட்டங்கள் மீது தீபாவளி ஆபர்.. நவ.5 குள்ள ரீசார்ஜ் செஞ்சா அடுத்த தீபாவளி வரை பலன்கள்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, 2024 தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு 'தீபாவளி தமாக்கா' என்கிற புதிய சலுகையை (Reliance Jio Diwali Dhamaka Offer) அறிவித்துள்ளது. இந்த சலுகை 2 ஜியோ திட்டங்கள் மீது மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன திட்டங்கள்? அந்த திட்டங்களின் கீழ் என்னென்ன சலுகைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த தீபாவளி தமாக்கா ஆபர் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ட்ரூ 5ஜி திட்டங்கள் (True 5G Plans) மீது மட்டுமே கிடைக்கும். ஒன்று - 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.899 (காலாண்டு) திட்டம்; இரண்டாவது - 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.3,599 (1 ஆண்டு) திட்டம். இவ்விரு ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும்.

அதாவது (1 ஆண்டு திட்டத்தின் கீழ்) இந்த தீபாவளிக்கு ரீசார்ஜ் செய்தால் அடுத்த தீபாவளி வரையிலான சலுகைகள் கிடைக்கும். இதில் - ஹோட்டல்கள் மற்றும் விமானப் பயணங்களுக்கான ரூ.3000 மதிப்புள்ள ஈஸ்மைட்ரிப்-க்கான (EaseMyTrip) வவுச்சர், ரூ.999 அல்லது அதற்கு மேலான பர்சேஸ்களுக்கு ஏஜியோவின் (Ajio) ரூ.200 மதிப்புள்ள கூப்பன், ரூ.150 மதிப்புள்ள ஸ்விக்கி (Swiggy) வவுச்சர் ஆகியவைகள் அடங்கும்.
வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, ரூ.899 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களளுக்கு ட்ரூ அன்லிமிடெட் 5ஜி நன்மைகள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 ஜிபி டேட்டா + கூடுதலாக 20 ஜிபி டேட்டா என மொத்தம் 200ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட நன்மைகள் 90நாட்களுக்கு கிடைக்கும்!
அடுத்ததாக உள்ள ரூ.3,599 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே ட்ரூ அன்லிமிடெட் 5ஜி நன்மைகள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, மேற்கண்ட 2 திட்டங்களிலும் கிடைக்கும் வவுச்சர்கள் ஆனது, ரீசார்ஜ் செய்த பிறகு பயனர்களின் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். தேவையான போது அவைகளை ரீடீம் செய்துகொள்ளலாம். இலவசமாக கிடைக்கும் வவுச்சர்களை ரீடீம் செய்வது எப்படி ?
1. உங்கள் போனில் இருக்கும் மைஜியோ (MyJio) ஆப்பை திறக்கவும்
2. பின்னர் ஆபர்ஸ் (Offers) செக்ஷனுக்கு செல்லவும்
3. இப்போது 'மை வின்னிங்ஸ் (My winnings) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து திறந்து, நீங்கள் ரிடீம் செய்ய விரும்பும் கூப்பனை கிளிக் செய்யவும்.
3. அடுத்து, கூப்பன் கோட்-ஐ காப்பி செய்து, பார்ட்னர் இணையதளத்தை பார்வையிட்டு, பணம் செலுத்தும் நேரத்தில் கூப்பனை பயன்படுத்தவும்.
முன்னரே குறிப்பிட்டபடி,. ஜியோவின் இந்த தீபாவளி தமாகா சலுகை ஆனது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது இந்த சலுகைகள் நேரலையில் உள்ளது;ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.899 அல்லது ரூ.3599 ஆகிய 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்து ரூ.3350 மதிப்புள்ள கூப்பன்களை முற்றிலும் இலவசமாக பெற்று.. நீங்கள் தேர்வு செய்த திட்டத்தின் வேலிடிட்டி அடிப்படையில் அடுத்த 90 நாட்களுக்கு அல்லது 365 நாட்களுக்கு அவைகளை ரீடீம் செய்து மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications








