மெல்ல., மெல்ல., முடியல- முக்கியமான மூன்று திட்டங்களை நீக்கிய ஜியோ: தினசரி டேட்டா திட்டமாச்சே!

|

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ. நிறுவனம் கடந்த செப்டம்பரில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் கூடிய மூன்று புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த நிலையில் தற்போது மூன்று திட்டங்களும் நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. ஜியோ நிறுவனம் முறையே ரூ.499, ரூ.666 மற்றும் ரூ.888 ஆகிய திட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறது. இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை ஜியோ சமீபத்தில் உயர்த்திய போது இந்த மூன்று திட்டங்களின் விலை மட்டும் உயர்த்தபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவால் திரும்பப் பெறப்பட்ட ரூ.499 திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே போல் ரூ.666 திட்டமானது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும், ரூ.888 திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் முறையே பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டங்களை திரும்பப் பெறுவதாக ஜியோ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்கள் ஜியோவின் இணையதளத்திலோ அல்லது செயலிலோ காட்டப்படவில்லை என்பதும் இவை அகற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோ கட்டண உயர்வு

ஜியோ கட்டண உயர்வு

ஜியோ கட்டண உயர்வை அறிவித்தபோது மூன்று திட்டங்களின் விலையையும் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களை அறிவித்தது. தற்போது நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோ தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ரூ.419, ரூ.609, ரூ.1199 மற்றும் ரூ.4199 ஆகும். ரூ.419 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.601 திட்டமானது அதே பலன்களுடன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் மற்றும் ஒரு வருடத்திற்கு 6ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி ஆகும்.

நீக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டம்

நீக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் அடுத்த ப்ரீபெய்ட் திட்டமானது முறையே ரூ.1199 மற்றும் ரூ.4199 என்ற விலையில் கிடைக்கிறது. ரூ.1199 திட்டமானது தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. அதேபோல் ரூ.4199 திட்டமானது வருடாந்திர திட்டமாகும், இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல், விஐ, ரிலையன்ஸ் ஜியோ

ஏர்டெல், விஐ, ரிலையன்ஸ் ஜியோ

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக விலை உயர்வை அறிவித்தன. பாரதி ஏர்டெல் நிறுவனம், அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் மற்றும் அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அதன் டேரிஃப் விலை திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்த புதிய அதிகரிப்பு விலை தற்போது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சில திட்டங்களின் நன்மைகளை நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகிறது.

3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

இதேபோல் ஏர்டெல் நிறுவனமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை ரத்து செய்துள்ளது. கடந்த மாதம் உயர்த்தப்பட்ட கட்டணத் திட்டங்களின் பட்டியலில் ஏர்டெல் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களைச் சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இப்போது ​​ஏர்டெல் நிறுவனம் சத்தமில்லாமல் அதன் மூன்று 3 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும் திட்டங்களை அவற்றுடன் வந்த நன்மைகளுடன் நிறுத்திவிட்டது. ஏர்டெல் அதன் ரூ. 398, ரூ. 499 மற்றும் ரூ. 558 விலையில் இருந்த அதன் 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. ஏர்டெல் இந்தத் திட்டங்களில் இந்த மாற்றத்தைப் பிரத்தியேகமாக அறிவிக்கவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Discontinued its three Prepaid Plans that offer daily 3GB data: Plan Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X