ஜியோவிற்கு பதிலடி : 70 நாட்கள் செல்லுபடியாகும் 2 அதிரடி ஏர்டெல் திட்டங்கள்.!

Written By:

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவசங்களை உடனடியாக திரும்ப பெறுமாறு ட்ராய் அறிவித்ததை தொடர்ந்து, சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை திரும்ப பெற்ற ஜியோ மிக விரைவிலேயே அதன் புத்தம் புதிய 'தண் தணா தண்' சலுகையின் ரூ.309/- என்ற திட்டம் தொடங்கி 3 மாதங்களுக்கான அதன் சேவைகளை அறிமுகம் செய்தது.

ஜியோ சேவைகள் முடியட்டும் என்று ஒரு கட்டத்திற்கு மேல் எந்தவிதமான போட்டி சலுகைகளையும் வெளியிடாமல் அமைதியாய் இருந்த ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் 'தண் தணா தண்' சலுகை வெளியானதும் பொறுமை இழந்து விட்டது போலும். ஜியோவின் 'தண் தணா தண்' சலுகைக்கு எதிரான தனது 70 நாட்கள் செல்லுபடியாகும் அதிரடி திட்டம் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த 2 திட்டங்களின் கீழ் பயனர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.? இந்த திட்டங்களின் விலை நிர்ணயம் என்ன.? இதை பெறுவது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நாள் ஒன்றுக்கு 1ஜிபி

நாள் ஒன்றுக்கு 1ஜிபி

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான பார்தி ஏர்டெல் இப்போது வரம்பற்ற அழைப்புகள் உடனான நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான தரவை வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது.

இரண்டு திட்டங்களும்

இரண்டு திட்டங்களும்

ரிலையன்ஸ் ஜியோவின் 'தண் தணா தண்' ஆபருக்கு போட்டியை களம் காணும் இந்த இரண்டு திட்டங்களும் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் அதாவது மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ஜியோ vs ஏர்டெல்

ஜியோ vs ஏர்டெல்

ரூ.399/- என்ற விலை நிர்ணயம் கொண்ட முதல் திட்டம் ஜியோவின் ரூ.309/- திட்டத்தை விட விலை அதிகமானது மற்றும் 16 நாட்கள் செல்லுபடி நாட்கள் குறைவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரம்பற்ற அழைப்பு

வரம்பற்ற அழைப்பு

மறுபக்கம் ரூ.244/- விலை நிர்ணயம் கொண்ட மற்றொரு திட்டம் அதே மாதிரியான 70 நாட்களுக்கு வரம்பற்ற தரவு வழங்கி ஏர்டெல் டூ ஏர்டெல் மட்டும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குக்கும். இந்த திட்டங்களை பெற உங்களிடம் ஒரு 4ஜி கைபேசி மற்றும் ஒரு ஏர்டெல் 4ஜி சிம் அட்டை அவசியம் ஏனெனில் இவைகள் இரண்டுமே 4ஜி திட்டங்களாகும்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணிற்கு

ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணிற்கு

விரைவில் இந்த 2 புதிய ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகமாகும் என்று அறிவிப்பு வெளியான உடனேயே ரூ.399/- ரீசார்ஜ் திட்டமானது ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணிற்கு மைஏர்டெல்ஆப் மூலம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

பெறுவது எப்படி.?

பெறுவது எப்படி.?

இதை அணுக மை ஏர்டெல் ஆப் உள்நுழைந்து பிரிவில் 'ஆபர்ஸ் பார் யூ' எனபத்தின் கீழ் தமிழ் கிஸ்பாட் அணியினருக்கு ரூ.399/- ரீசார்ஜ் கிடைக்கிறது. வரம்பற்ற அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் இந்த திட்டம் ஜூன் 30, 2017 வரை செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Jio Dhan Dhana Dhan effect: Airtel offers 1GB data per day for 70 days. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot