Home
News

அனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு! என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் ஒவ்வொரு பிராட்பேண்ட் சேவை இணைப்புடனும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச செட் டாப் பாக்ஸ் வழங்க முடிவுசெய்துள்ளது.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட்

பில்லினியர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், செப்டம்பர் 5 முதல் ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையை இந்தியா முழுதும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.

இலவச செட் டாப் பாக்ஸ்

அனைத்து பயனர்களைக் கவர்ந்திழுக்கும் படி, ஜியோ நிறுவனம் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்குப் பாராட்டு சலுகையாக, அனைவருக்கும் இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

மிரட்டலான வேகத்தில் பிராட்பேண்ட் சேவை

ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் இலவச லேண்ட்லைன் இணைப்பு, 100 மெகா பைட் (எம்.பி.பி.எஸ்) முதல் வினாடிக்கு 1ஜிபி வரையிலான வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும். இத்திட்டத்தின் மாதாந்திர சாந்த ரூ .700 முதல் தொடங்கி ரூ.10,000 வரையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இலவச எச்டி டிவி

இத்துடன் வருடாந்திர திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு இலவச எச்டி டிவி செட் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். இத்துடன் இலவச செட் டாப் பாக்ஸும் வழங்கப்படுகிறது.

இலவச சேவை

அதுமட்டுமின்றி ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு, திரைப்படங்கள் மற்றும் முன்னணி பொழுதுபோக்கு மொபைல் பயன்பாடுகளின் பிற வீடியோ உள்ளடக்கங்களுக்கான அணுகலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான சந்தா கட்டணம் மாதாந்திர பிராட்பேண்ட் இணைப்பு விகிதங்களில் தொகுக்கப்படும், தனி கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவியில் எச்.டி வீடியோ கால்லிங்

இத்துடன் எஸ்.டி.பி டிவி செட்களில் வீடியோ அழைப்பு சேவையையும் வழங்கும். வாடிக்கையாளர் இந்த சேவைக்காக எஸ்.டி.பி. உடன் கேமராவை இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த சேவையின் மூலம் பயனர்கள் தங்கள் டிவியில் இருந்தே எச்.டி வீடியோ கால்லிங் செய்துகொள்ளலாம்.

பாரதி ஏர்டெல் எஸ்.டி.பி. எக்ஸ்ட்ரீம்

இந்த வாரத் தொடக்கத்தில், பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.3,999 விலையில் புதிய எஸ்.டி.பி. எக்ஸ்ட்ரீம்(XStream) மேடையில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோக்கள் மற்றும் ஹாட்ஸ்டார் உட்பட சில முன்னணி நிறுவனங்களின் வீடியோ ஸ்ட்ரீமிங் மொபைல் பயன்பாடுகளின் உள்ளடக்கத்தை வழங்கியது.

ரூ.999 கிடைக்கும் சேவைகள்

முதல் முறையாக சுனில் பாரதி மிட்டல் தலைமையிலான நிறுவனம், பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளான ஜீ5(ZEE5), ஹூக் (Hooq), ஹோய் சோய்(Hoi Choi), ஈரோஸ் நொவ் (Eros Now), ஹங்கமா பிளே(HungamaPlay), ஷேமரூமி (ShemarooMe), அல்ட்ரா(Ultra) மற்றும் Curiosity Stream ஆகியவற்றுக்கான அணுகலை வெறும் ரூ.999 என்ற வருடாந்திர கட்டணத்தில் வழங்கியுள்ளது.

ஏர்டெல் vs ஜியோ

பாரதி ஏர்டெல்லில் கிடைக்கும் சில பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் ஜியோஃபைபரில் கிடைக்கும். ஜியோ ஏற்கனவே மொபைல் சாதனங்களுக்கான ஹாட்ஸ்டாருடன் ஒரு முக்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது, அத்துடன் ஈரோஸ் நொவ் சேவையையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio decided to give everyone a free set-top-box! Do you know the reason : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X